அவள் நினைவிலே | தினகரன் வாரமஞ்சரி

அவள் நினைவிலே

சில்லென்று வீசும்

இனிய தென்றல்

என் மேனியை

தொட்டுச் செல்கிறது

அவள் நினைவிலே

அதன் சுகம்

இனிமையைத் தரவில்லை

கமகம வென

நறுமணம் வீசும்

மலர்கள்

சுகந்தம் கமழ்கின்றன

அவள் நினைவிலே

அதன் வாசம்

இனிமையைத் தரவில்லை

தேன் போல இனிக்கும்

மெல்லிசை கீதங்கள்

என் செவிகளில்

கேட்கின்றன.

அவள் நினைவிலே

அதன் ரசனை

இனிமையைத் தரவில்லை

நாவுக்குச் சுவை தரும்

வித விதமான

உணவுகள்

என் முன்னே வருகின்றன

அவள் நினைவில்

அதன் சுவை

இனிமையைத் தரவில்லை

Comments