ஜெயலலிதாவிற்கு பிறகு விஜய் மட்டுமே நடிகர் | தினகரன் வாரமஞ்சரி

ஜெயலலிதாவிற்கு பிறகு விஜய் மட்டுமே நடிகர்

 

தளபதி விஜய்யின் அடுத்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் ராதாரவி. மேலும் அவர் சமீபத்தில் விஜய்யுடன் எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தற்போது விஜய்62 பற்றி ஒரு பேட்டியில் பேசிய ராதாரவி ஜெயலலிதாவிற்கு பிறகு நடிகர் விஜய்யின் வீட்டிற்கு நான் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் பேரன் விஜய் மீது பைத்தியமாக இருப்பான். நான் சுறா படம் நடிக்கும்போதே அவருடன் போட்டோ எடுக்கவேண்டும் என கேட்டான். அந்த ஆசை முருகதாஸ் படத்தில் நடிக்கும்போது தான் நிறைவேறியுள்ளதுÓ என கூறியுள்ளார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி பேசிய அவர், விஜய் இந்த மண்ணின் மைந்தர், ரசிகர்கள் ஆதரவளித்து அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன். ஆனால் அவரின் கொள்கை பற்றி கேள்வி கேட்பதை தவிர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Comments