இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாக NDB தெரிவு | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் மிகச்சிறந்த வங்கியாக NDB தெரிவு

குளோபல் பினான்ஸ் சஞ்சிகையினால் (Global Finance Magazine) முன்னெடுக்கப்படும் 25வது ஆசிய பசுபிக் வருடாந்த மிகச்சிறந்த வங்கி விருது நிகழ்வில் NDB ஆனது ‘இலங்கையின் மிகச்சிறந்த வங்கி’ (Best Bank in Sri Lanka) ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விருதானது, சொத்து வளர்ச்சி, இலாபத்தன்மை, பூகோள ரீதியான அடைவு, வினைத்திறன்மிகு உறவாடல்கள், புதிய வணிக மேம்பாடுகள் மற்றும் புத்தாக்க சேவைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, குளோபல் பினான்ஸ் சஞ்சிகையின் ஆசிரியர்களால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த விருதுக்கான அளவுகோல் மதிப்பீடுகள், உரிமைமுதல் மதிப்பாளர்கள், கடன் தரப்படுத்தல் மதிப்பாய்வாளர்கள், வங்கி ஆலோசகர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துகளும் உள்ளடங்கியே தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குளோபல் பினான்ஸ் சஞ்சிகையினது, வங்கியியல் மற்றும் நிதித்துறையில் உலகளாவிய முன்னணி வெளியீடாக விளங்குகின்றது.

சர்வதேச ரீதியிலான பல்வேறு வங்கிகள், இந்த சஞ்சிகை அளிக்கும் ‘மிகச்சிறந்த வங்கி’ விருதினை பெறும் வகையில் ஆர்வத்துடன் போட்டியிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த விருது குறித்து கருத்துரைத்த NDB பிரதம நிறைவேற்று அதிகாரி டிமந்த செனவிரட்ண “கெளரவ மிகுந்த ‘மிகச்சிறந்த இலங்கை வங்கி’ என்ற விருதினை பெற்றுக்கொண்டமை எமக்கு மிகுந்த பெருமையை தருகின்றது.

சர்வதேச ரீதியில் உன்னத கெளரவமிகுந்த வங்கியியல் மற்றும் நிதி சார் வெளியீடாக விளங்கும், ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் குளோபல் பினான்ஸ் சஞ்சிகையினால் அளிக்கப்படும் உலகளாவிய அங்கீகாரத்தினை அளிக்கும் இந்த விருதானது, எமக்கு மிகுந்த சிறப்பினை ஈட்டித்தந்துள்ளது.

இரண்டாவது தடவையாக இந்த பெருமை மிகு விருதினை பெற்றுக்கொள்கின்றது. இதற்கு முன்னால் 2015 ஆம் ஆண்டில் இந்த விருதினை ஈட்டியமை குறிப்பிடத்தக்கது.”

Comments