உலகின் மிகப்பெரிய Big Bad Wolf புத்தக விற்பனை இலங்கையில் | தினகரன் வாரமஞ்சரி

உலகின் மிகப்பெரிய Big Bad Wolf புத்தக விற்பனை இலங்கையில்

வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு வாழ்நாளிலேயே கிடைக்கும் அரியதொரு வாய்ப்பாக புத்தகங்களைத் தேடிக் கண்டறிந்து கொள்வனவு செய்யும் வாய்ப்பினை Big Bad Wolf வழங்கவுள்ளது. இந்த சர்வதேச புத்தக விற்பனை நிகழ்வானது 2018 ஜுன் மாதத்தில் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் (Sri Lanka Exhibition and Convention Centre - SLECC) ஆரம்பமாகவுள்ளது. தினமும் 24 மணி நேரமும் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதால், இப்பாரிய புத்தக விற்பனை நிகழ்வு முடிவடையும் வரையில் பகலோ அல்லது இரவோ, எந்த வேளையிலும் புத்தக சொர்க்கத்தை புத்தக ஆர்வலர்கள் பெற்று அனுபவிக்க முடியும்.

கடந்த ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறுவர்கள், முதியோர்கள் என ஏராளமான மக்கள் ஒன்றுதிரண்டதை காணக்கூடியதாக இருந்தது. பரந்த தெரிவிலான புத்தகங்கள் மற்றும் தனித்துவமான தள்ளுபடிகள் ஆகியவற்றுடன், கடந்த ஆண்டு ஒக்டோபரில் இலங்கைக்கான அங்குரார்ப்பண வருகையின்போது இந்நிகழ்வு பெருமளவில் வெற்றிகரமாக இடம்பெற்றது. இந்த ஆண்டும் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் முன்பதாகவே நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், முன்பை விடவும் பாரிய அளவிலும், சிறப்பாகவும் இடம்பெறவுள்ள நிகழ்வின் மீள் வருகையை அறியப்பெறுவதையிட்டு இலங்கையிலுள்ள வாசிப்பு ஆர்வலர்கள் மிகவும் மகிழ்ச்சி கொள்ள முடியும்.

பலதரப்பட்ட புத்தகங்களுக்கு 60% முதல் 80% வரையான தள்ளுபடிகளுடன், விற்பனை நிகழ்வில் நம்பமுடியாத புத்தக சலுகைகளுடன் வீடு திரும்புவதற்கான உத்தரவாதம் நாடெங்கிலுமுள்ள புத்தக ஆர்வலர்களுக்கு கிடைக்கவுள்ளது. இலக்கியம், கட்டடக்கலை, விஞ்ஞானம், இளம் வயதினருக்கானவை, அறிவியல், அறிவியல்- அல்லாத மற்றும் கோப்பி மேசைப் புத்தகங்கள் போன்ற பல துறைகளை உள்ளடக்கி உலகெங்கிலும் புகழ்பெற்ற வெளியீட்டாளர்களிடமிருந்து தருவிக்கப்பட்ட, 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தம்புதிய, உயர்தர ஆங்கில மொழி புத்தகங்கள் இவ்விற்பனை நிகழ்வில் இடம்பெறவுள்ளன.

வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு கட்டுபடியாகும் விலைகளில் புத்தகங்களைப் பெற்றுக்கொடுக்கவும், வாசிப்பு வீதத்தை அதிகரித்து, இலங்கையில் வாசிப்பவர்கள் மத்தியில் ஆங்கில மொழியில் தேர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பங்களிப்பதும் இப்புத்தக விற்பனை நிகழ்வின் நோக்கமாகும்.

Comments