உலக கிண்ண போட்டிக்கு முன்னர் குணமாகிவிடுவேன்- நெய்மார் | தினகரன் வாரமஞ்சரி

உலக கிண்ண போட்டிக்கு முன்னர் குணமாகிவிடுவேன்- நெய்மார்

ரஷ்யாவில் ஜூன் மாதம் தொடங்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிக்குள் நான் முழுமையாக தயாராகி விடுவேன் என பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் கூறியுள்ளார்.

பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார், பாரீஸ் செயன்ட் ஜெர்மைன் கழக அணிக்காகவும் விளையாடுகிறார். கடந்த பிப்ரவரி மாதம் கிளப் போட்டியில் ஆடிய போது நெய்மார் கால் பாதத்தில் காயம் அடைந்தார்.

உடனடியாக தாயகம் திரும்பிய அவருக்கு காலில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டது.

காயத்தில் இருந்து குணமடைந்து வரும் நெய்மார் கூறுகையில், ‘காயம் மோசமானது தான். ஆனால் தற்போது ஓய்வு எடுத்து வருவதால் தேறி வருகிறேன்.

ரஷ்யாவில் ஜூன் மாதம் தொடங்கும் உலக கிண்ண கால்பந்து போட்டிக்குள் நான் முழுமையாக தயாராகி விடுவேன்’ என்றார். மே 21-ம் திகதி தொடங்கும் தேசிய அணிக்கான பயிற்சி முகாமில் நெய்மார் பங்கேற்பார் என்று தெரிகிறது.

Comments