ஆதன தொழிற்துறைக்கு வலுச்சேர்க்கும் RE/MAX | தினகரன் வாரமஞ்சரி

ஆதன தொழிற்துறைக்கு வலுச்சேர்க்கும் RE/MAX

தென்னாசிய பிராந்தியத்தில், அதீத உட்கட்டமைப்பு மேம்பாடுகள், தொலைநோக்கு மிக்க இலக்குகள் மற்றும் பன்முக மூலதன முதலீடுகள் போன்ற பல்வேறு காரணிகள் காரணமாக இலங்கை மிகச்சிறந்த வளர்ச்சிப்போக்கினை காண்பித்து வருகின்றது.

உலகின் முன்னணி ஆதன வீட்டு மனை தனியுரித்து நிறுவனமான (real estate franchise leader) RE/MAX ஆனது மேம்பாடடைந்து வரும் ஸ்தி ரமான இந்த வாய்ப்பினை பற்றியவாறு, இந்த தீவுத்தேசத்தில், தமது இருப்பினை மேலும் பலப்படுத்தியவாறு, வளர்ச்சியடைவதனை உத்தேசமாக கொண்டுள்ளது.

RE/MAX ஸ்ரீலங்கா இன் வருடாந்த Black-Tie மாநாட்டில் (Annual Black-Tie Convention) பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த உலகளாவிய மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான துணைத்தலைவர், RE/MAX உலக தலைமையகம், ஐக்கிய அமெரிக்கா - ஷவ்னா கில்பர்ட், இலங்கையானது புதிய யுகம் ஒன்றினை நோக்கிய பயணத்தின் உச்ச முனையில் நிற்கும் இந்த சந்தர்ப்பத்தில், வளர்ந்து வரும் ஆதன தொழிற்துறையின் பெறுமானத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலான முனைப்புகளை RE/MAX கண்டிப்பாக மேற்கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையைப் போலவே ஏனைய ஆசிய நாடுகளில், RE/MAX எவ்வாறு காத்திரமான வெற்றியினை பெற்று வருகின்றது என்பது குறித்து பகிர்ந்து கொண்ட அவர் “45 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தினை கொண்டுள்ள நாம், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் 7,500 ற்கும் மேற்பட்ட அலுவலகங்களுடன், 115,000 க்கும் மேற்பட்ட முகவர் வலையமைப்பின் உறுதுணையோடு இயங்கி வருகின்றோம். இந்த பாரிய எண்ணிக்கையானது, உலகளாவிய ரீதியில் எமது வலுவினை பறைசாற்றுகின்றது. RE/MAX ஸ்ரீலங்கா உடன், இலங்கையின் ஆதன தொழிற்துறை சந்தையினை மறுசீரமைத்து, புனரமைக்க எம்மால் முடியும்.

ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள சாத்தியம் மற்றும் எமது காற்தடங்களை விஸ்தரிப்பதற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டுகொண்டுள்ள நாம், இப்பிராந்தியத்தில் அதீத வெற்றியினை பெற்றுள்ளோம் என்றால் மிகையாகாது. இதன் ஊடாக, எமது நிகரற்ற சேவைகளை இப்பிராந்தியமும் பெற்றுக்கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வினைத்திறன்மிகு அபிவிருத்தி பாதையினை இலங்கையில் அவதானித்துள்ள நாம், எதிர்காலத்திலும் இந்நாட்டின் முன்னேற்றங்களுக்கு கைகொடுத்து, அதன் ஒரு அங்கமாக திகழ்வதற்கு எண்ணியுள்ளோம். இதன் காரணமாகவே, இலங்கையில் நாம் செயலாற்றுகின்றோம்” எனத் தெரிவித்தார்.

Comments