ACHIEVERS LANKA BUSINESS SCHOOL உடன் இணையும் | தினகரன் வாரமஞ்சரி

ACHIEVERS LANKA BUSINESS SCHOOL உடன் இணையும்

Achievers Lanka Business School மற்றும் Excellence College of Management என்பன இணைந்து 2018 ஏப்ரல் மாதம் முதல் செயற்படத் தொடங்கும் வகையிலான தனித்த வர்த்தக கல்லூரியாக மாறவுள்ளதாக அறிவித்துள்ளன.

Achievers Lanka Business School ஆனது இலங்கையில் தரமான CIMA தகைமைகளை வழங்குவதில் பெயர்பெற்ற கல்வி நிறுவகமாகும். அத்துடன் SLIM Brand Excellence 2012 விருது விழாவில் வெள்ளி விருதினை வென்றுள்ளதோடு, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில், ஆசியாவின் சிறந்த வர்த்தகக் கல்லூரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. இக் கல்லூ ரியானது 100க்கும் மேற்பட்ட வெற்றியாளர்களை உருவாக்கியுள்ளதோடு, அது ஆரம்பிக்கப்பட்ட 12 வருடகாலத்தில் 40,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி புகட்டியுள்ளது.

அதேவேளை, Excellence College of Management ஆனது அது ஆரம்பிக்கப்பட்ட 4 வருட காலத்தில்், உள்ளூரில் ACCA தகைமைகளுக்கான சிறந்த கல்வி நிலையமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. கூட்டாண்மை நிறுவனங்களுக்கான “வேலைக்குத் தயாரான” மாணவர்களை தயார்படுத்தியுள்ளதோடு, இலங்கையில் ACCA பட்டம்பெறுவதற்காக அனேகர் நாடும் ஒரு கல்வி நிறுவகமாகவும் அது தன்னை நிலைநிறுத்தியுள்ளது. அத்துடன் 2016 ஆம் ஆண்டில் SLIM விருதுகளில் சிறந்த, நடுத்தர மற்றும் சிறிய அளவலான தொழில் முனைவாண்மை வர்த்தக நாமமாகவும் இதன் பெயர் முன்மொழியப்பட்டிருந்தது.

எனவே செயற்பாட்டு ரீதியில் இவ்விரு நிறுவகங்களையும் ஒன்றிணைப்பதானது. அவற்றின் பங்குதாரர்கள், மாணவர்கள், வளா கங்கள் மற்றும் அவ்விரு நிலையங்களுக்கும் மேலும் பல அனுகூலங்கள் கிடைப்பதற்கான தெளிவான வழியை காட்டியுள்ளது.

Achievers Lanka Business School ஆனது, ACCA மற்றும் CIMA கற்கை நெறிகளுக்கான கல்வி நிறுவகமாக விளங்கும்.

இவ்விரு நிறுவனங்களையும் இணைப்பதற்கான முக்கிய காரணமாயமைந்தது இரு நிறுவகங்களினது நிபுணத்துவத்தினையும் இணைப்பதன் மூலம், போட்டித்தன்மையை அதிகரித்து, நிதித்துறைசார் திறன்களை அதிகரிப்பதாகும்.

Comments