வெள்ளி விருதினை பெற்ற NDB அரளிய | தினகரன் வாரமஞ்சரி

வெள்ளி விருதினை பெற்ற NDB அரளிய

NDB ஆனது மும்பையின் ஆசிய வாடிக்கையாளர் ஊடாடல் மன்றம் (Asian Customer Engagement Forum (ACEF)) இனால் முன்னெடுக்கப்பட்ட 7வது குளோபல் வாடிக்கையாளர் ஊடாடல் விருதுகள் (7th Global Customer Engagement Awards) நிகழ்வில் மிகச்சிறந்த பிரபல நட்சத்திரத்தின் ஆதரவு ஊக்குவிப்புக்காக (“Best Celebrity Endorsement”) வெள்ளி விருதினை பெற்றுக்கொண்டது.

இந்த விருதானது, பிரபல நட்சத்திரமான உமாரியா சின்ஹவனவை பெண்கள் சேமிப்புக் கணக்கான அரளிய கணக்கிற்கான குரலாக பயன்படுத்தியமைக்காக கிடைத்தது.

வங்கியின் அரளிய சேமிப்பு சேவையானது, இன்றைய பெண்களின் தேவைகளை பரிந்து கொண்டு, அவர்கள் முன்னெடுக்கும் அனைத்து வகிபாகங்களையும் கருத்திற்கொண்டு, அதற்கு ஆதரவளித்தவாறு, அவர்களின் பெரிய மற்றும் நீண்ட கால இலக்குகளை நிறைவேற்றும் வகையில் அதற்கான உபகாரமளிக்கும் வகையில் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சேவையானது, இலங்கையிலுள்ள மகளிலுக்கு நிலையான அத்திவாரத்தினை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் புகழ்பெற்ற பாடகியான உமாரியா சின்ஹவன்ச உடன் இந்த சேவையை பிரபல்யப்படுத்துவதான பிரத்தியேக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது

அரளிய சேவை அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட காலகட்டத்தில், ஒரு சில வங்கிகள் மாத்திரதே, பெண்களுக்கென தனித்துவமான கணக்குகளை, பெண் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகள் மற்றும் உணர்வு சார்ந்த விடயங்களுடனான விசேட அனுகூலங்களை அளித்தவாறு கொண்டிருந்தது. தக்க தருணத்தில் அனுசரணையளிக்கும் கணக்கொன்றுடன், மேலதிக அனுகூலங்களும் இணைந்து பெறத்தக்க பெண்களுக்கான கணக்கொன்றின் தேவை அப்போதே உணரப்பட்டது

ACEF ஆனது, வர்த்தகநாம உன்னதத்தில், நிகரற்ற சாதனைகைள அளிக்கும் மிகச்சிறந்த வர்த்தகநாமங்கள், நிறுவனங்கள், முகவர் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரை ஊக்குவிப்பதில் கரம்கோர்க்கின்றது.

Comments