உலகின் முதலாவது முக்கெமரா Huawei P20 Pro அறிமுகம் | தினகரன் வாரமஞ்சரி

உலகின் முதலாவது முக்கெமரா Huawei P20 Pro அறிமுகம்

ஸ்மார்ட்போன் வர்த்தகநாமங்கள் மத்தியில் முதலிடத்தில் திகழ்ந்து வரும் Huawei, உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தியுள்ள Huawei P20 Pro முன்னணி ஸ்மார்ட்போனை கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் அறிமுகப்படுத்தியுள்ளது. Huawei Device Sri Lanka மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா ஆகிய நிறுவனங்களின் உயரதிகாரிகள், நாடெங்கிலுமிருந்து பிரதான முகவர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் மற்றும் விருந்தினர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் ReadMe இன் இணை ஸ்தாபகரான அன்ட்ரூ ஜெபராஜ் புத்தாக்கமான உற்பத்தியின் சிறப்பம்சங்கள் தொடர்பில் விபரமாக விளக்கியதுடன், முன்னணி புகைப்படக் கலைஞரான மாலக பிரேமசிறி ஸ்மார்ட்போனின் புகைப்படவியல் சிறப்பை விளக்கினார்.

உலகில் முக்கெமராவைக் கொண்ட முதலாவது ஸ்மார்ட்போனாக Huawei P20 Pro திகழ்வதுடன், அதன் முக்கெமராத் தொகுதியில் அதிநவீன செயற்கை புலனாய்வுத் தொழில்நுட்ப உள்ளிணைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அறிமுகமாகும் முதலாவது ஸ்மார்ட்போனாக Huawei P20 Pro அமைந்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படுகின்ற இது, பாரம்பரியமான அனைத்து பிரதான வர்த்தகநாமங்களையும் தகர்த்து, ஒரு முன்னணி உற்பத்தி என்ற பாராட்டையும் பெற்றுள்ளது.

மொபைல் புகைப்படவியலில் புதுமையை அறிமுகப்படுத்தி, உலகில் முதலாவது Leica பின்புற முக்கெமராவை Huawei P20 Pro கொண்டுள்ளதுடன், இச்சாதனம் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்கை புலனாய்வுடனான நவீன தொழில்நுட்பத்தையும், கலைவடிவத்தையும் கொண்டுள்ள நிலையில், புதுமையான ஸ்மார்ட்போன் அனுபவத்தை வாழ்வில் அனைவருக்கும் வழங்கவுள்ளது.

பின்புற கெமரா தொகுதியானது 40MP RGB sensor, 20MP monochrome sensor மற்றும் telephoto lens கொண்ட ஒரு 8MP sensor ஆகியவற்றைக் கொண்டுள்ளது. HUAWEI P20 Pro ஆனது செயற்கைப் புலனாய்வு ஒப்பனை மற்றும் 3D portrait lighting ஆகியவற்றுடன் 24MP செல்ஃபி கெமராவைக் கொண்டுள்ளதுடன், சரும தொனி சீர்செய்தல், சுவாரசியமான முகத்தோற்றம் மற்றும் யதார்த்தமான 3D அம்ச மேம்பாடுகளுடன் அழகிய செல்ஃபி படங்களை எடுக்க உதவுகின்றது.

இந்நிகழ்வில் Huawei Device Sri Lanka நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை அதிகாரியான பீட்டர் லியு உரையாற்றுகையில், வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மாற்றியமைக்கும் புத்தாக்கத்தை தொடர்ந்தும் வழங்குவதில் Huawei கவனம் செலுத்தியுள்ளது.

Comments