அஜித்துக்கு நன்றி சொன்ன நயன்தாரா | தினகரன் வாரமஞ்சரி

அஜித்துக்கு நன்றி சொன்ன நயன்தாரா

பில்லா, ஏகன், ஆரம்பம் படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க தொடங்கியதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் நயன்தாரா.

சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது.

முதல் ஷெட்யூலில் அஜித் - நயன்தாரா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் படமாக்கப்படுகின்றன. இந்த படத்தில் வெகு நாட்களுக்கு பிறகு கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

படத்தில் அஜித்துக்கு நிகரான முக்கியத்துவம் நயன்தாராவுக்கும் தரப்பட்டுள்ளதாம். அஜித்தும் நயன்தாராவும் இதற்கு முன்பு பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்துள்ளனர். ஆனால் அந்த படங்களை விட இந்த படத்தில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. நயன்தாரா ஒரு ஹீரோ அளவுக்கு வளர்ந்துவிட்டார். எனவே அவருக்கு இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் தரப்பட வேண்டும் என்று அஜித் கேட்டுக்கொண்டதாக தகவல் வந்தது.

படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இதற்காக அஜித்துக்கு நன்றி கூறினாராம் நயன்தாரா. கிராமத்து பின்னணியில் குடும்பம் மற்றும் திகில் கதையாக அமைந்த படமாக உருவாகி வருகிறது. விஸ்வாசம் படம் மூலம் முதன்முறையாக அஜித் படத்துக்கு இசையமைக்கிறார் டி.இமான்.

Comments