அம்மாவாகும் நந்திதா! | தினகரன் வாரமஞ்சரி

அம்மாவாகும் நந்திதா!

அட்டகத்தி படத்தில் அறிமுகமான நடிகை நந்திதா அதன் பிறகு பல்வேறு சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். புலி உள்ளிட்ட சில படங்களிலும் சிறு வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவர் அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ‘நர்மதா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், நந்திதா ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். விஜய் வசந்த் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். பாலாவிடம் உதவியாளராக இருந்த கீதா ராஜ்புத் நர்மதா படத்தை தயாரித்து இயக்கவுள்ளார்.

ஏற்கனவே நயன்தாரா, அனுஷ்கா, ஜோதிகா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் நடிகைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது நந்திதாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

Comments