இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன் | தினகரன் வாரமஞ்சரி

இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்

 

பொன்ராம் இயக்கத்தில் ‘சீமராஜா’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அந்த படத்திற்காக இதுவரை இல்லாத புதிய தோற்றத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் நடிப்பில் உருவாகும் படம் ‘சீமராஜா’. தென்காசி, குற்றாலம் பகுதிகளில் வளர்ந்த ‘சீமராஜா’ படம் தமிழ் சினிமாவின் 48 நாட்கள் வேலை நிறுத்தம் காரணமாக இடையில் நின்றது. வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் மீண்டும் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது ‘சீமராஜா’ படக்குழு. எதிர்வரும் 24- ஆம் திகதி தலக்கோணத்தில் படப்பிடிப்பை தொடரவிருக்கிறார்கள்.

இந்த காட்சிகளுக்காக சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்காத புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்த தோற்றத்துக்காக தாடி வளர்த்து வருகிறார். ப்ளாஷ்பேக்கில் இடம்பெறவுள்ள இந்த தோற்றம் இன்னொரு கதாபாத்திரமாக இருக்கலாம் என்கிறார்கள். ஸ்டன்ட் இயக்குநர் அனல் அரசு சிவகார்த்திகேயன் பங்குபெறும் சண்டைக்காட்சியை படம் பிடிக்கவுள்ளார்.

Comments