கீர்த்தி சுரேஷின் வசூல் சாதனை | தினகரன் வாரமஞ்சரி

கீர்த்தி சுரேஷின் வசூல் சாதனை

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ​வெளியான படம் மகாநதி. தெலுங்கில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் நடிகையர் திலகம் என வெளியாகியது. ஆனால் படத்தின் சிறப்புக்காட்சிகளால் நல்ல விமர்சனங்களை அள்ளியது. மேலும் 3 க்கும் அதிகமான ரேட்டிங்ஸ் கூட பெற்றது.

கீர்த்திக்கு பெரும் பாராட்டுக்களும், வாழ்த்துகளும் குவிந்துள்ளது. ஆனால் அமெரிக்காவில் கடந்த செவ்வாய்கிழமையே படம் வெளியாகிவிட்டது.

இப்படத்திற்கு நல்ல வரவேற்பு அங்கு இருப்பதாக நாம் முன்பே கூறியிருந்தோம், அரை மில்லியன் டாலர் தாண்டி வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் இப்படம் 4 கோடி ரூபா வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.

Comments