காணி நிலம் வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

காணி நிலம் வேண்டும்!

அரசாங்கத்திலை வேலை செய்ற ஆக்களுக்கும் கலைத்துறை, ஊடகத்துறையிலை உள்ளவங்களுக்கும் அரசாங்கத்தாலை வீடு குடுத்திருக்கிறது; குடுக்கிறது எல்லாம் உங்களுக்கும் தெரியும்.

சிலபேர் ஒன்றுக்கு ரெண்டு மூன்று வீடுகளைக்கூட அரசாங்கத்திற்ற இருந்து பெற்றுக்ெகாண்டிருக்கிறார்கள். ஆனால், சுழிக்கத் தெரியாதவன் வருசக்கணக்காக வேலை செய்துகொண்டு இளிச்சவாயனா இருக்கிறான்.

சிலர், தம்மை ஊடகவியலாளர் என்று சொல்லிக்ெகாள்பவர்கள், அப்படி பெற்றுக்ெகாண்ட வீடுகளைப் பயன்படுத்தாமல் பூட்டிவைத்திருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. இதைத்தான் நாய் தேங்காய்ச்சிரட்டையைக் கௌவிக்ெகாண்டு போன மாதிரி என்று சொல்வார்கள் என்கிறார் நண்பர் ராம். தேங்காய்ச்சிரட்டையைக் கௌவிக் ெகாள்ளும் நாய் தானும் உண்ணாது அடுத்த வரையும் உண்ணவிடாது! இப்படி சிலபேர், மற்றவர்களுக்குக் கிடைக்கவிருந்த வாய்ப்பையும் தட்டிப்பறித்து வீடுகளைப் பெற்றுக்ெகாண்டு அதனை மூடி வைத்துக்ெகாண்டிருந்தால் எப்படியிருக்கும். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவிடம் வீடு(கள்) வாங்கியவர்களும் பூட்டிவைத்துக்கொண்டிருப்பதாக அண்மையில் நண்பர் ஒருவர் சொன்னார்.

இலங்கைக்குப் புகழைத்தேடிக் ெகாடுத்த; கொடுக்கும் கலைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்குக்கூட அரசாங்கத்தினால் வீட்டு வசதி செய்து கொடுக்கப்படுகிறது. ஆனால், கலைக்காகவும் இலக்கியத்திற்காகவும் ஊடகத்துறைக்காகவும் அளப்பரிய சேவைகளை ஆற்றிய பலர் இன்னமும் பல ஆண்டுகளாக வாடகை வீடுகளில் உழல்கிறார்கள்.

இதையெல்லாம் இப்போது சொல்வதற்கு என்ன காரணம் என்று நீங்கள் எண்ணக்கூடும்! இருக்கிறது! உங்களுக்குத் தெரியும், மல்லிகை சி.குமார் என்பவர் நாடறிந்த சிறுகதை எழுத்தாளர். அவரால் மலையகத்தின் அடிமட்ட நிலையில் இருந்து மீளமுடியாவிட்டாலும், தன் கதாபாத்திரங்களை வெளியுலகிற்குக் கொண்டு வந்திருக்கிறார். பெரிய விருதுகளை அவர் இலங்கைக்குப் பெற்றுக் ெகாடுக்கவில்லைதான். ஆனால், அவரது படைப்புகள் விருதுகளுக்கும் அப்பாற்பட்டவை, ஆழமான சமுதாய விழுமியத்தையும் பிரக்ைஞயையும் எடுத்தியம்புபவை. அவரை இலங்கையின் தேசிய பரப்பிற்குள் கொண்டு வருவதற்கு எவரும் முயற்சி எடுக்கவில்லை. அப்படி கொண்டுவரப்பட்டிருந்தால், மல்லிகை சி.குமாரையும் இலங்கை அரசு இனங்கண்டிருக்கும். இவரைப்போலவே மற்றொரு நாடறிந்த கவிஞரான குறிஞ்சித்தென்னவனும் இறுதிவரை மலையகத்தின் அவலத்திலிருந்து மீள்வதற்கான முயற்சியில் தோற்றுப்போனவர். அவரையும் எவரும் கண்டுகொள்ளவில்லை. நடைபெற்ற இலக்கிய விழாக்களிலும் சாகித்திய விழாக்களிலும் தத்தம் பெயரையும் இருப்பையும் தக்கவைத்துக்ெகாள்வதிலேயே பல முக்கியஸ்தர்கள் கவனம் செலுத்தியிருக்கிறார்கள்; செலுத்தி வருகிறார்கள். மத்திய மாகாண சாகித்திய விழாவில்கூடத் தங்கள் செய்திகள் ஊடகங்களில் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கிஞ்சித்தும் சம்பந்தமே இல்லாதவர்களுக்கே தொடர்ந்து விருதுகளையும் பாராட்டுகளையும் வழங்கி வருகிறார்கள். மல்லிகை சி. குமார் போன்றவர்களுக்கு அவ்வாறான வாய்ப்புகள் வழங்கப்பட்டிருந்தால், அவர் இன்னும் சற்று உற்சாகத்துடன் தனது படைப்புகளைத் தந்து இலங்கையர்கள் மத்தியில் பிரகாசித்திருப்பார்; தனது வாழ்க்ைகயையும் பிரகாசப்படுத்திக்ெகாண்டிருப்பார்.

சரி, மல்லிகை சி.குமார் பற்றி ஏன் இந்தத் திடீர்க் கரிசனை என்ற கேள்வியும் உங்களுக்கு எழலாம். கடந்த வாரம் அவரது பெயர் செய்திகளில் வெளிவந்தது. அவரது இல்லத்தரசி காலமான செய்தியை ஊடகங்கள் வெளியிட்டிருந்தது மட்டுமல்லாது, இறுதிச் சடங்கிற்குச் சென்று வந்தவர்கள் மனம் விட்டுத் தெரிவித்த கருத்துகளையும் தந்திருந்தன. அந்தத் தகவலில்தான் குமாரின் வாழ்க்ைக பற்றிப் பிரஸ்தாபித்திருந்தார்கள். குமார் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, நல்ல ஓவியரும்கூட. தோட்டங்களுக்கான முக்கிய அறிவிப்புப் பலகைகள் அனைத்தையும் வரைந்து அழகுபடுத்துபவர் அவர்தான். அவர் ஓர் ஓவியர் என்பது அண்மையில்தான் தெரியும். ஆனால், அவரது மாடும் வீடும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டின்போதே அவரைப்பற்றி அறிந்துகொள்ள முடிந்தது.

அப்போது வீடமைப்புக்குப் பொறுப்பாக பெ.சந்திரசேகரனும் கால்நடை களுக்குப் பொறுப்பாக சௌமியமூர்த்தியாரும் இருந்தபோதுதான் மாடும் வீடும் என்ற உருவகப்பட தனது கருத்துகளைச் சிறுகதை மூலமாகத் தெரிவித்திருந்தார்.

இருந்தும் அந்தத் தொகுதியும் அவருக்குக் கைகொடுக்கவில்லை.

குறிஞ்சித் தென்னவனைச் சந்திப்பதற்காக ஒரு தடவை அவரது இல்லம் தேடிப்போய் இருந்தபோது அவர் பூண்டுலோயா போய் இருப்பதாக அவரது பிள்ளைகள் சொன்னார்கள். என்றாலும் என்னை உபசரித்து அனுப்பி வைத்தார்கள். ஓரிரு தினங்களுக்குப் பின்னர் குறிஞ்சித் தென்னவன் ஒரு கடிதத்தை எனக்கு எழுதியிருந்தார்."பார்த்தீர்களா? ஒரு நாடறிந்த கவிஞனின் நிலையை! உங்களை அமர வைத்து உபசரிப்பதற்குக்கூட எனது இல்லத்தில் வசதியில்லை. மன்னித்துக்ெகாள்ளுங்கள். நீங்கள் வீடு தேடி வந்தபோது நான் இல்லாதுபோனமை எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அப்போதுதான் புரிந்தது, என்னை அவர்கள் அமரவைத்து உபசரித்தது அவரது இல்லத்தில் அல்ல என்பது! கவிஞரின் கடிதம் கண்களில் நீரைச்சொரியச்செய்ததை இன்னும் நெஞ்சை நெருடச்செய்கிறது.

இன்று அவரது குடும்ப நிலையைப் பிள்ளைகள் மாற்றிக்ெகாண்டிருப்பார்கள்; மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான நிலை இனியும் நீடிக்க விடக்கூடாது. மலையகத்தில் வரிசைக்குடியிருப்பை இடித்துத் தரைமட்டமாக்கும் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மல்லிகை சி.குமார் போன்று மலையகத்திலும் கொழும்பிலும் கஷ்டப்பட்டுக்ெகாண்டிருக்கும் உண்மையான கலைஞர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் குறைந்தபட்சம் வீட்டுப்பிரச்சினையையாவது தீர்த்து வைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். அஃது அவர்களின் கடமை. தீர்ப்பார்களா?

Comments