கொழும்பு நகரின் அதியுயர் ஆடம்பர நவீன சந்தை 'வன் கோல் பேஸ்' | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு நகரின் அதியுயர் ஆடம்பர நவீன சந்தை 'வன் கோல் பேஸ்'

ஷங்ரி-லா குழுமத்தின் வன் கோல் பேஸில் நவீன சந்தைத் தொகுதியை குத்தகைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் கைச்சாத்திடும் வைபவம் அண்மையில் வெகு விமர்சையாக ஷங்ரி-லா ஹோட்டலில் நடைபெற்றது.

ஒடெல் பிஎல்சி, கீல்ஸ் சுப்பர், புட் ஸ்ரூடியோ மற்றும் PVR சினமா ஆகிய நான்கு பிரதான நிறுவனங்களுடன் ஷங்ரி-லா ஹோட்டெல் லங்கா பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள், வர்த்தகப் பங்காளிகள், ஊடகங்கள் மற்றும் ஏனைய விசேட அதிதிகளும் இதில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குத்தகை பெறுவோரினதும் இணைப்பைக் குறிக்கும் வகையில் தங்க நிறத்தினாலான செங்கட்டிகள் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு கொழும்பு நகரின் அதியுயர் ஆடம்பர நவீன சந்தை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கொழும்பு நகரில் முதன் முதலில் சர்வதேச ரீதியில் கட்டியெழுப்பப்பட்டு முகாமைத்துவம் செய்யப்படும் ஷங்ரி-லாவின் கலப்பு அபிவிருத்தித் திட்டமான வன் கோல் பேஸின் ஒரு பகுதியாக இந்த நவீன சந்தை காணப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டின்போது, இது பொது மக்களுக்காகத் திறந்த வைக்கப்படவுள்ளது. கடற்கரையை நோக்கியதாகவும், உயர்தரத்திலும், அளவிலும் பாரிய அமைப்பான இது, கொழும்பு நகரின் முக்கியதொரு இடத்தைப் பிடிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

இந்த அபிவிருத்தித் திட்டம், இரண்டு கோபுரங்களைக் கொண்டமைந்துள்ளது. ஒரு கோபுரத்தில் அலுவலகங்களும், மற்றையதில் நவீன சந்தை மற்றும் ஹோட்டெல் தொகுதிகளும் அமைந்துள்ளன. வன் கோல் பேஸில் அமைந்துள்ள வாசஸ்தலங்கள், சூரியன் உதிப்பதிலிருந்து அது மறையும் வரையிலான அழகிய கண்கவர் காட்சிகளை கண்களுக்கு விருந்தாக வழங்கவும் தயாராக இருக்கின்றன. மேலும், இங்கு குடியிருப்போருக்காகவே தனிப்பட்ட சங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு அமைக்கப்படவுள்ள அலுவலகங்கள் 600,000 சதுர அடியில் அதி உயர் அலுவலக நிலையங்களாக கொழும்பு நகரின் மத்தியில் அமைக்கப்படவுள்ளன.

ஷன்ங்ரி-லா ஹோட்டேலின் ஐந்து நட்சத்திர ஹோட்டேலுடன் உலகம் அறிந்த தரத்திலான ஷங்ரி-லாவின் உபசரணையையும் இங்கு பெற்றுக்கொள்ள முடியும். தற்போதைய நிலையில், 70% மான வீடுகள் விற்கப்பட்டுள்ளன. அரைவாசிக்கும் மேற்பட்ட சந்தைப்பகுதிகள் ஏற்கனவே குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளன.

Comments