நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பயிற்சிப் பட்டறைகள் | தினகரன் வாரமஞ்சரி

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பயிற்சிப் பட்டறைகள்

இலங்கையில் காணப்படும் சிறு, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு வலுச்சேர்க்கும் நோக்குடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி அண்மையில் பயிற்சிப்பட்டறை தொடரை ஏற்பாடு செய்திருந்தது. பெல்மடுல்ல, இரத்தினபுரி, அம்பலாங்கொைட, எல்பிட்டிய, அக்குரெஸ்ஸ, ஹிக்கடுவ, நாவல, நுகேகொ​ைட மற்றும் பத்தரமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான சிறு, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் இந்த பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்றிருந்தனர்.

வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அமிந்த பெரேரா பிரதான உரையை நிகழ்த்தியிருந்ததுடன், சிறு, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் வளர்ச்சிக்காக தம்மை எவ்வாறு நிலை நிறுத்திக் கொள்வது மற்றும் போட்டியாளர்களிடமிருந்து தம்மை எவ்வாறு வேறுபடுத்திக் கொள்வது என்பது பற்றிய விளக்கங்களை இரத்தினபுரி மற்றும் ஹிக்கடுவயில் நடைபெற்ற நிகழ்வுகளில் வழங்கியிருந்தார். இலங்கை தேசிய சமாதான நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹிரான் டி அல்விஸ் பத்தரமுல்லையில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் “வணிக பிணக்குகளின் போது சமரசத்துக்கான சமாதான பேச்சு” பற்றி விளக்கங்களை வழங்கியிருந்தார்.

இலங்கையின் சிறு, நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்களுக்கு நிதிசார் சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி தம்மை அர்ப்பணித்துள்ளதுடன், வியாபார உலகில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கிறது.

Comments