“இலங்கை மாஸ்டர் பிரிண்டர் 2018” விருதை சுவீகரித்துள்ள Printcare | தினகரன் வாரமஞ்சரி

“இலங்கை மாஸ்டர் பிரிண்டர் 2018” விருதை சுவீகரித்துள்ள Printcare

அச்சிடல் மற்றும் பொதியிடல் தீர்வு விடயத்தில் புகழ்பெற்றுத் திகழும் முன்னணி பொதியிடல் ஏற்றுமதியாளரான Printcare Plc, அச்சிடல் துறையில் சிறப்பாக செயலாற்றுபவர்களை கெளரவிக்கும் வகையில் இலங்கை அச்சிடல் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட biennial print போட்டியில் “இலங்கை மாஸ்டர் பிரிண்டர் 2018” விருதை சுவீகரித்திருந்தது.

வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், தேயிலை, இனிப்புப்பொருட்கள், அழகியல் பொருட்கள், மருந்துப்பொருட்கள் மற்றும் ஆடைத் தொழிற்துறை போன்றவற்றை சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஏற்றுமதி நாமங்களில் தொடர்ச்சியாக முன்னிலை வகிக்கும் Printcare, இலங்கையில் காணப்படும 60க்கும் மேற்பட்ட அச்சிடல் நிறுவனங்கள் மற்றும் 28 பிரிவுகளில் கிடைத்திருந்த 1000க்கும் அதிகமான விண்ணப்பங்களிலிருந்து வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

மாஸ்டர் பிரிண்டர் விருதுக்கு மேலதிகமாக பிரிண்ட்கெயார் ஏழு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரு வெண்கல விருதுகளையும் வென்றிருந்ததன் மூலமாக நாட்டில் காணப்படும் சிறந்த நிறுவனமாக திகழ்கிறது.

வருடமொன்றில் இரு தடவைகள் இடம்பெறும் இந்நிகழ்வு, நாட்டின் அச்சிடல் துறைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், இதில் மாநாடு, கண்காட்சி மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வில், மாபெரும் இறுதி நிகழ்வை கொண்டிருந்தது. இதில் சகல அங்கத்தவர்களும் ஒன்றிணைந்து துறையின் சிறந்த செயற்பாடுகளை கொண்டாட முன்வந்திருந்தனர். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.

தரமான அச்சிடல், அலங்காரம், கொள்கை, பூர்த்திசெய்தல் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றின் அடிப்படையில் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தன. அச்சிடல் துறையில் வெவ்வேறு தொழில்நுட்ப பிரிவுகளைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Comments