பெண்கள் போட்டிகளில் திறமை காட்டியவர்களுக்கு விருது | தினகரன் வாரமஞ்சரி

பெண்கள் போட்டிகளில் திறமை காட்டியவர்களுக்கு விருது

ஒப்சேர்வர் - -மொபிடெல் பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது விழாவின் 40 ஆண்டு நிறைவை முன்னிட்டு அடுத்த வருடம் இடம்பெறும் 41 விருது வழங்கல் விழாவில் பெண்களுக்கான கிரிக்கெட் விருது வழங்கும் நிகழ்வை இணைத்து நடத்துவதற்கு அனுசரணையாளர் மற்றும் ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் தேசிய கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பை அதிகம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்த விருது வழங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் இடம்பெறும் போட்டிகளில் இருந்து பெண் வீராங்கனைகள் பங்கு பற்றலாம்.

சிந்த வீரராங்கனை.சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த சகல துறை வீராங்கனை, சிறந்த பாடசாலை பெண் கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந் த அணி (அகில இலங்கை ரீதியில்) ஆகிய பகுதியில் விருது வழங்கப்படவுள்ளது.

வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்தும் சிந்த பெண்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு கொண்டவர்கள் அடுத்தவருடம் இடம்பெறும் விருது வழங்கல் விழாவுக்கு விண்ணப்பிக்க முடியும் .ஆண்கள் பாடசாலை கிரிக்கெட் போட்டியை போன்று சம அளவில் எதிர்வரும் காலங்களில் விருது வழங்க நடவடிக்ககை மேற்கெள்ளப்பட்டுள்ளது.

இலங்கை தேசிய அணியில் வடக்கு ,கிழக்கு பகுதியில் இருந்து பெண் கிரிக்கெட் வீரராங்கனைகள் இணைத்துக் கொள்ளப்படுவதற்கு ஏதுவாகவும் இந்த விருது வழங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments