ஒரு கிலோ தங்கத்துடன் இந்தியர் கைது | தினகரன் வாரமஞ்சரி

ஒரு கிலோ தங்கத்துடன் இந்தியர் கைது

சுமார் ஒரு கிலோ எடைகொண்ட 40 தங்க பிஸ்கட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முற்பட்ட இந்தியர் ஒருவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றுக்காலை 8.45க்கு வந்திறங்கிய ஏயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏ.ஐ. 273 ரக விமானத்தில் வந்த இந்தியர் தனது காற்சட்டைப்பைக்குள்ளும், பர்சுக்குள்ளும் மிக சூட்சுமமாக மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றின் மொத்த பெறுமதி சுமார் 2 கோடியே 60 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று அதிகாலை சுமார் 5.50 மணியளவில் ஸ்ரீங்கன் விமான வேலைக்குச் சொந்தமான யூ.எல் 869 ரக விமானத்தில் இலங்கை வந்த இரு வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்து 23,000 வெளிநாட்டு சிகரட்டுக்ள மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 11 இலட்சத்து 50,000 என மதிப்பிடப்பட்டுள்ளது என சுங்க திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் விபுல மினுவம் பிட்டிய தெரிவித்தார்.

Comments