படையினர் போர்க்குற்றம் இழைக்கவேயில்லை | தினகரன் வாரமஞ்சரி

படையினர் போர்க்குற்றம் இழைக்கவேயில்லை

உண்மையை உணர்ந்து பொறுப்புடன் செயற்படுமாறு நாட்டு மக்களுக்கு  ஜனாதிபதி அழைப்பு

 

நமது நிருபர்

 

சில ஊடகங்களும் அடிப்படைவாத அமைப்புகளும் சொல்வதைப்போன்று இராணுவத்தினர் எந்தவிதப் போர்க்குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (19) பத்தரமுல்லையில் நடைபெற்ற படை வீரர் ஞாபகார்த்த வைபவத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

படைவீரர்கள் ஞாபகார்த்தம் கடந்த ஒன்பது வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், போர் வீரர்கள் யார்? பயங்கரவாதிகள் யார்? என்பதை இன்னமும் அடையாளம் கண்டுகொள்ள தவறியுள்ளமை கவலை அளிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். தீவிரவாதப் போக்குடையவர்கள் தெற்கில் மட்டுமன்றி வடக்கிலும் இருக்கிறார்கள். ஆகவே, உண்மை நிலவரத்தைப் புரிந்துகொண்டு பொறுப்புடன் செயற்பட வேண்டியது சகல பிரஜைகளினதும் கடமையாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக கொடூரமான எல்ரிரிஈ இயக்கத்தின் கோட்பாட்டைத் தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் இனம், மதம், அரசியல் உள்ளிட்ட அனைத்துப் பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளபோதிலும் பல்வேறு புலி ஆதரவு அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்துகொண்டு அரசாங்கத்திற்குச் சவால்விடுத்துக்ெகாண்டும் விமர்சித்துக்ெகாண்டும் இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து அரசாங்கங்கள் புலிப் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு உண்மையாகப் பாடுபட்டன. கடந்த ஆட்சியின் போது 2009 ஆம் ஆண்டு புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டார்கள். எனினும், புலிகள் சார்ப்பான அமைப்புகளும் வலையமைப்புகளும் வெளிநாடுகளில் இருந்துகொண்டு தங்கள் ஈழக்கனவை நனவாக்குவதற்காக பல்வேறு கோஷங்களை எழுப்பி தாய்நாட்டைப் பிரிக்கும் நோக்கில் செயற்படுகிறார்கள். இருந்தபோதிலும், கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரசாங்கத்தின் சர்வதேச உறவுகளையும் வெளிநாட்டுக் கொள்கையையும் வலுப்படுத்தி புலிகள் இயக்கத்தின் சித்தாந்தத்தைத் தோற்கடித்திருக்கின்றோம். அனைத்து உலகத் தலைவர்களுடனான நட்பையும் நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஏனைய சர்வதேச அமைப்புகளின் நம்பிக்ைகயை வென்றெடுக்கவும் முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

"எங்களுடைய வெளிநாட்டுக் ெகாள்கை மூலமாகவும் எனது தனிப்பட்ட முயற்சியின் பலனாகவும் புலிகளின் கோட்பாட்டை முறியடிக்க முடிந்துள்ளது" என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

 

Comments