இலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் ஆடைத் தரத்தால் அதிகரிக்கும் வெளிநாட்டுச் சந்தை

“உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்சதரத்தில் உள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப் பாரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது” என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

AISEX மற்றும் FASE ஆடைத் தொழிற்துறைக்கான எக்ஸ்போ கண்காட்சியின் 08வது பதிப்பின் அங்குரார்ப்பண வைபவம் கடந்த 10 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை ஆடை நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் லக்டாஸ் பெர்னாண்டோ, கூட்டு ஆடை சங்க பேரவையின் செயலாளர் நாயகம் டுலி கூரே, மற்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் உட்பட பல உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆடை தொழில்துறைசார் பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் ஆடை உற்பத்தி துறையானது பெரிய ஏற்றுமதியாகும், உலகளவில் எங்களது ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உச்ச தரத்தில் உள்ளது. நாம் இவ்வாண்டு எங்கள் உலக வர்க்க ஆடை துறை மீது ஒரு திருப்புமுனை. இவ்வாண்டு முதல் காலாண்டில் மொத்த ஆடைகள் ஏற்றுமதி 04% சதவீதமாக அதிகரித்து, 1.26 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இத்துறையானது கடந்த ஆண்டில் வரலாற்றுமிக்களவில் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாயை பெற்றுத் தந்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் 03 சதவீத அதிகரிப்புடன் 4.8 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டித்தந்துள்ளது.

Comments