இலங்கையின் முதலாவது வேலைத்தளமாக CBL தெரிவு | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் முதலாவது வேலைத்தளமாக CBL தெரிவு

CBL (சிலோன் பிஸ்கட்ஸ் லிமிட்டெட்), 2018 ஆம் ஆண்டில் மிக முக்கிய விருதான Great Place to Work® சான்றிதழைப் பெற்றுள்ளது. பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் கருணாரத்ன மற்றும் குழும மனிதவள பணிப்பாளர் திருமதி குமுதினி வெல்மில்கே ஆகியோர், கொழும்பில் நடைபெற்ற விசேட வைபவத்தின்போது CBL சார்பில் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர். Great Place to Work® - இந்தியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நிறுவனத்தின் இலங்கை பணிப்பாளர் பிரசஞ்ஜித் பட்டாச்சாரியா மற்றும் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி ஷனிக்கா ரத்நாயக்க ஆகியோர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளின் கருணாரத்ன, 'CBL இந்த விருதை வென்றுள்ளமை கெளரவத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளதுடன் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த விருது ஊழியர்களின் ஈடுபாட்டையும், கடின உழைப்பையும் உறுதிப்படுத்துவது மாத்திரமன்றி, ஒற்றுமையான சிறந்த வேலைத் தளத்தை CBL எப்போதும் ஆதரிக்கிறது. தனது ஊழியர்களின் தொடர் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. அவர்களின் வாழ்க்கையில் எந்தளவுக்கு வரவேற்பும் பெறுமதியும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது இங்கு உறுதியாகிறது. CBL இவ்வருடம் அதன் 50வது வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது.

தனது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் அனைத்து ஆர்வம் காட்டுவோர் மீதும் உன்னிப்பான அவதானத்தைச் செலுத்தியுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், இந்த ஐந்து தசாப்த காலத்தில் பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்று எமது ஊழியர்களின் ஆசீர்வாதத்துடன் வேலைத்தளம் நாளுக்கு நாள் உயர்வடைகின்றது என்றும் தெரிவித்தார்.

வேலைத்தளச் செயற்பாட்டை மதிப்பீடு செய்வதில் முக்கிய இடத்தை வகிக்கும் Great Place To Work' நிறுவனம், உலகம் முழுவதும் 8,000க்கும் அதிகமான நிறுவனங்களுடன் பங்களிப்பைக் கொண்டுள்ளது.

Comments