இலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை அரசும் Horizon Campus உம் இணைந்து மீள அறிமுகப்படுத்திய இலவச கடன் திட்டம்

போதிய இட வசதிகள் இன்மையால் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள் பண வசதியின்றி உயர்கல்விவாய்ப்பைத் தவறவிடாதிருக்க உயர்கல்வியமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டியற்ற கடன் திட்டத்தின் மூலம், கல்வி பயில்வதற்காக இவ்வாண்டில் இதுவரை 4000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர்களில் சுமார் 1160 பேர் தங்கள் விருப்புக்குரிய பல்கலைக்கழகத் தேர்வாக Horizon Campus இனைத் தேர்ந்தெடுத்துள்ளனர். தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வட்டியற்ற கடன் திட்டதின் மூலம் உயர்கல்வி வாய்ப்பைப்் பெறுவதற்கான மாணவர்களின் தெரிவாக Horizon Campus இருந்துள்ளது.

மேற்படி மீள் அறிமுக விழாவில் 25 மாவட்டங்களிலும் இருந்தும் 1160 மாணவர்களுக்கு, வட்டியற்ற கடன் திட்டத்தின் மூலம் கல்வி பயில்வதற்கான கடிதங்கள் கையளிக்கப்பட்டன. தொழிற் சந்தையால் அதிகளவில் விரும்பப்படும் வியாபார முகாமைத்துவ விஞ்ஞானமாணி( HRM), சந்தைப்படுத்தல் சிறப்பு முகாமைத்துவமாணி, தகவல் தொடர்பாடல் விஞ்ஞானமாணி. வலையமைப்பு மற்றும் மொபைல் கணனித் தகவல்தொழில்நுட்ப விஞ்ஞானமாணி (சிறப்பு), மற்றும் கல்விமாணி (சிறப்பு) பட்டப்படிப்புகள் உட்பட எட்டு துறைகளில் இவர்கள் தங்கள் மேற்படிப்பைத் தொடர முடியும்.

இத்திட்டத்தின் கீழ் வட்டியற்ற கல்விக் கடனாக ரூ 800,000.00 உம், வாழ்க்கைச் செலவு மற்றும் போக்குவரத்து செலவினமாக ரூ 300,000.00 உம் ஆக மொத்தம் ரூ 1,100,000.00 இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும்.

மாணவர்கள் கடனுதவி வழங்கும் இலங்கை வங்கியுடன் கடன் உடன்படிக்கையொன்றில் ஈடுபடுவர். இத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் 10 முதல் 12 வருட காலம் வரையான கடன் மீள்செலுத்துகைக் காலத்தினைக் கொண்டிருப்பர். மீள் செலுத்துகையானது வேலைவாய்ப்பினைப் பெறுவதுடன் ஆரம்பிக்கும்.

Horizon Campus இன் தலைவர் திரு உபுல் தரணகம உரையாற்றுகையில், கடந்த வருடம் இத்திட்டத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற வெற்றியானது, கல்வியில் சரியான வாய்ப்புகள் வழங்கப்படுவதற்கும் இளையோரின் திறன்களை பட்டை தீட்டுவதற்கான சரியான சாட்சியமாகவும் அமைகின்றதெனக் குறிப்பிட்டார்.

Comments