வீரவில 'வில்லா சபாரி' ஹோட்டலுக்கு சுற்றுலாத்துறையின் தங்கவிருது | தினகரன் வாரமஞ்சரி

வீரவில 'வில்லா சபாரி' ஹோட்டலுக்கு சுற்றுலாத்துறையின் தங்கவிருது

மேல் மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுலா விருதுகள் - 2018 விருது வழங்கும் விழாவில் வீரவில வில்லா சபாரி ஹோட்டல் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளது. மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தலைமையில் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் அண்மையில் இவ்விழா நடைபெற்றது.

அழகிய வீரவில குளத்தை அண்டியதாக மனங்கவர் சூழலில் அமைந்துள்ள வில்லா சபாரி ஹோட்டல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றதொரு இடமாகும். இந்த ஹோட்டலுக்கே உரிய சிறப்பு யாதெனில் யால, உடவளவை, லுணுகம்வெஹேர, புந்தள வனப் பூங்காக்களை இலகுவாகவும் விரைவாகவும் அடையக்கூடிய ஓர் இடத்தில் இந்த ஹோட்டல் அமைந்துள்ளமை ஆகும். அத்தோடு, கதிர்காமம், திஸ்ஸமஹாராம, சித்துல்பவ்வ, கிரிந்த போன்ற வணக்கஸ்தலங்கள் மற்றும் வீரவில வாவி, திஸ்ஸ வாவி, கிரிந்திஓயா போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்களும் இந்த ஹோட்டலுக்கு அண்மித்ததாகவே அமைந்துள்ளன.

குளிரூட்டப்பட்ட, கேபல் டி.வி, மினிபார் போன்ற வசதிகளை கொண்ட சொகுசு அறைகளும் சாதாரண அறைகளுமாக மொத்தம் 48 அறைகளுடன் கூடிய வில்லா சபாரி ஹோட்டல் வளாகத்தில் நீச்சல் தடாகத்துடன் எழில்மிகு பூங்காவொன்றும் அமைந்துள்ளது. அத்தோடு வீரவில குளத்துக்கு அண்டியதாக விளையாட்டுச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு உகந்த திறந்த வெளியொன்றும் உள்ளது. வில்லா சபாரி ஹோட்டலின் உணவகம் வெளி விருந்தினர்களுக்கும் திறந்துள்ளதோடு சுதேச உணவு வகைகளுடன் மேலைத்தேய மற்றும் கீழைத்தேய முறைகளில் சமைக்கப்பட்ட பல்வேறு அருசுவை உணவுகளும் இங்கு பரிமாறப்படுகிறது. ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடாத்துவதற்கான வசதிகளும் உள்ளன. தரமான சபாரி ஜீப் வண்டிகளையும் உங்களால் சபாரி வில்லா ஹோட்டலில் பெற முடிவதோடு இந்த ஹோட்டலின் முகாமைத்துவப் பணிப்பாளரான வீரகோன் சபாரி ஜீப் துறையில் முன்னோடி என்ற புகழை பெற்றவராக உள்ளார்.

Comments