வெல்வெட்டின் மாபெரும் பரிசான AXIA கார்வென்ற பி.பீ.சுரங்க | தினகரன் வாரமஞ்சரி

வெல்வெட்டின் மாபெரும் பரிசான AXIA கார்வென்ற பி.பீ.சுரங்க

வெல்வெட் அழகு சவர்க்காரத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த ஊக்குவிப்பு போட்டியின் மாபெரும் பரிசான Perodua Axia காரை, ஊவா மாகாணத்தின், மொனராகலை, ஒக்கம்பிட்டியவைச் சேர்ந்த பி.பீ.சுரங்க வெற்றியீட்டியிருந்தார். அவர் தாம் வெற்றியீட்டுவதற்கு ஏதுவாக அமைந்த வெல்வெட் டபிள் பெக் சவர்க்காரத்தை தமது மனைவி சமிளா, சந்தையிலிருந்து கொள்வனவு செய்து வீட்டுக்கு கொண்டு வந்து, குறித்த SMS ஐ அனுப்பிய விதம் தொடர்பில் விளக்கமளித்திருந்தார்.

எனது கையடக்க தொலைபேசி முறையாக இயங்காது. எனவே, என்னால் SMS சரியாக அனுப்பப்பட்டுள்ளதா என்பதைக்கூட பரிசோதித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. எனது பெற்றோர் உயிருடன் இருந்திருந்தால், என்னைப் பார்த்து மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். என்றார். சுரங்க மற்றும் சமிளா ஆகியோருக்கு நான்கு வயது நிரம்பிய மகள் ஒருவர் உள்ளார். விவசாய செயற்பாடுகளுக்கு மேலாக, மேசன் வேலை செய்து தமது குடும்ப வருமானத்தை சுரங்க நிவர்த்தி செய்கிறார். இவர்களுக்கு கிடைத்துள்ள இந்த மாபெரும் கார் பரிசு, அவர்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.

நுகர்வோருக்கு மிருதுவான சருமத்தையும், தினசரி பணப்பரிசுகளையும் பெற்றுக் கொடுக்கும் வகையில் வெல்வெட் மென்மையான உலகமும் - அதிக பரிசுகளும் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. நுகர்வோர் தமக்கு பிடித்த Rose & Pomegranate with Purple Lotus, Rose & Pomegranate with Honey மற்றும் Yoghurt அல்லது Milk & Almond வெல்வெட் சோப் டபள் பெக்கை கொள்வனவு செய்வதன் மூலமாக இந்த திட்டத்தில் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

எமது நுகர்வோரின் உள்ளங்களையும் மனங்களையும் நாம் நன்கு புரிந்து வைத்துள்ளதுடன், அவர்களை மகிழ்விப்பதற்கு எப்போதும் புதிய வழிமுறைகள் குறித்து நாம் கவனம் செலுத்துகிறோம் என்றார்.

Comments