Ninewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம் | தினகரன் வாரமஞ்சரி

Ninewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு விஜயம் செய்த இந்தோனேசிய மருத்துவ குழாம்

Ninewells தாய் மற்றும் சேய் பராமரிப்பு மருத்துவமனைக்கு, இந்தோனேசியாவில் இருந்தான மகப்பேற்றியல் மற்றும் பெண்நோயியல் நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழுவொன்று அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தது. தெற்காசியாவிலேயே மிகக் குறைந்தளவிலான தாய்சேய் மரணவீதத்தைக் கொண்ட நாடான இலங்கையின் சுகாதார பராமரிப்பு முறைமைகள் பற்றி, குறிப்பாக அதன் தாய் சேய் பராமரிப்பு முறைமைகள் பற்றி, ஆராயும் முகமாக அவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இலங்கைக்கான விஜயம் குறித்துக் கருத்துக்கூறிய டாக்டர் அமர் சிராஜுத்தீன்( இந்தோனேசிய விசேட பெண்நோயியல் மற்றும் மகப்பேற்று நிபுணர்) – “இந்தோனேசியா மகப்பேற்றின் போதான அதிகூடிய தாய்சேய் மரண வீதத்தினைக் கொண்டிருக்கையில், எங்களது நட்புநாடான இலங்கை தெற்காசியாவிலேயே ஆகக்குறைந்த தாய் சேய் மரண வீதத்தினைக் கொண்டிருக்கின்றது. எனவே இலங்கையின் சுகாதாரப் பராமரிப்பு சேவையானது எவ்வாறு சிறப்பாகச் செயற்படுகின்றதென்பதை நேரில் கண்டறியும் முகமாகவே எமது விஜயம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களை இந்தோனேசியாவில் பிரயோகித்து அதன் மிக அதிகளவிலான தாய் சேய் மரண வீதத்துக்கெதிராகப் போராட நாங்கள் எண்ணியுள்ளோம். அதேவேளை Ninewells Hospital இல் எங்கள் அனைவருக்கும் வழங்கிய அற்புதமான வரவேற்புக்காக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.”

Ninewells தாய் மற்றும் சேய்் பராமரிப்பு மருத்துவமனையானது இலங்கையில் உள்ள மகப்பேற்றியல் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஒரேயொரு மருத்துவமனையாகும். அது கொழும்பு 05 கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ளது. இம் மருத்துவமனையானது, கர்ப்ப காலம், குழந்தைப்பேறு, IVF சிகிச்சைகள், மகப்பேறின்மை, மற்றும் பிந்திய இனப்பெருக்க வயது போன்றனவற்றுக்கான சிகிச்சைகளை வழங்குகின்றது. Ninewells Hospital ஆனது இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் நாட்டின் சிறந்த அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளுள் ஒன்றாக விளங்குவதோடு, நாட்டின் மிகவும் வெற்றிகரமான கருவுறல் மையமாகவும் விளங்குகின்றது.

Comments