இந்திப் படத்தில் வேதிகா | தினகரன் வாரமஞ்சரி

இந்திப் படத்தில் வேதிகா

சமீப காலமாக படங்கள் இல்லாமல் இருந்த நடிகை வேதிகா, அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு வந்த நிலையில் தற்போது பாலிவுட்டில் இம்ரான் ஹஸ்மி ஜோடியாக ஒப்பந்தமாகியிருக்கிறார். கமலை வைத்து பாபநாசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப், அடுத்து ஒரு இந்தி படம் இயக்க இருக்கிறார். இந்த படத்துக்கு கதாநாயகியாக வேதிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வேதிகா சிலகாலம் வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். சமீபத்தில் தன்னுடைய கவர்ச்சி படங்கள் சிலவற்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிந்து பரபரப்பாக்கினார். அதன் பிறகு வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.

இந்தி முன்னணி நடிகர்களான இம்ரான் ஹஸ்மி மற்றும் ரிஷி கபூர் இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படம் ஒரு ஆங்கில திரில்லர் படத்தின் தழுவல்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், படப்பிடிப்பை ஒரே கட்டமாக 45 நாட்களில் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார் ஜீத்து ஜோசப். அடுத்து காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார்.

முன்பெல்லாம் தமிழில் இருந்துதான் இந்திக்கு இயக்குனர்கள் செல்வார்கள். ஆனால் மலையாளத்தில் வரும் படங்களின் தாக்கம் நாடு முழுக்கவே எதிரொலிப்பதால் மலையாள இயக்குனர்களும் இந்தியில் கால் பதிக்கிறார்கள். ப்ரியதர்‌ஷன், சித்திக்கை தொடர்ந்து ஜீத்து ஜோசப்பும் அந்த வரிசையில் இணைகிறார்.

Comments