உணவு கொண்டாட்டத்துடன் 25 வருட பூர்த்தியை ​கொண்டாடும் | தினகரன் வாரமஞ்சரி

உணவு கொண்டாட்டத்துடன் 25 வருட பூர்த்தியை ​கொண்டாடும்

கொழும்பில் அமைந்துள்ள புகழ்பெற்ற தாய்லாந்து உணவகமான ளுயை, ஹவுஸ், தனது 25 வருட பூர்த்தியை இம் மாதம் கொண்டாடுகிறது. மே மாதம் 24 ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை விசேட தாய்லாந்து உணவு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. தாய்லாந்தின் நான்கு பிராந்தியங்களின் புகழ்பெற்ற உணவுகளை இதன் போது தயாரித்து பரிமாற தீர்மானித்துள்ளது.

இதனை முன்னிட்டு, தாய்லாந்தின் விசேட சமையல் நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். Siam ஹவுஸில் வழமையாக பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு மாறான தாய்லாந்தின் விசேடமான உணவு வகைகள் இதன் போது வழங்கப்படும்.

2018 மே மாதம் 23ஆம் திகதி விசேட வைபவத்துடன் 25 வருட பூர்த்தியை குறிக்கும் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகும். தனது 25 வருட நிறைவை முன்னிட்டு Siam ஹவுஸ் விசேட தபால் முத்திரை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

தனது வெள்ளி விழா குறித்தும் Siam ஹவுஸின் வரலாறு தொடர்பிலும் பென்ஜாரொங் பிரைவட் லிமிட்டெட் தலைவர் லயனல் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், 1993 இல், இலங்கையில் தாய்லாந்தின் உணவை அறிமுகம் செய்த முதலாவது உணவகமாக நாம் திகழ்ந்தோம்.

அக்காலப்பகுதியில் நாம் புரட்சிகரமான ஒரு உணவகமாக அமைந்திருந்ததுடன், தாய்லாந்திலிருந்து எமது உணவு தயாரிப்பு குழுவை அழைத்து வந்திருந்தோம். தலைமை சமையல் நிபுணரும் தாய்லாந்தைச் சேர்ந்தவராக காணப்பட்டார். இன்றும் நாம் வழங்கும் பிரத்தியேகமான தாய்லாந்தின் உணவு வேளைகள் மற்றும் தொடர்ச்சியாக பேணி வரும் நியமங்கள் போன்றவற்றுக்காக கீர்த்தி நாமத்தை பேணி வருகிறோம் என்றார்.

Comments