BMW, Hyundai வாகனங்களுக்கு விசேட லீசிங் திட்டங்கள் | தினகரன் வாரமஞ்சரி

BMW, Hyundai வாகனங்களுக்கு விசேட லீசிங் திட்டங்கள்

இலங்கையில் BMW மற்றும் Hyundai வாகனங்களை இறக்குமதி செய்து விநியோகிக்கும் ஏக விநியோகஸ்தர்களாக திகழும் Prestige Automobile Pvt. Ltd, கொமர்ஷல் வங்கியுடன் கைகோர்த்து, வாடிக்கையாளர்களின் கனவு வாகனத்தை கொள்வனவு செய்வதற்காக விசேட லீசிங் திட்டங்களை வழங்க முன்வந்துள்ளது. இந்தத் திட்டத்தில் பெருமளவான விலைக்கழிவுகள் மற்றும் நெகிழ்ச்சியான மீளக் கொடுப்பனவு திட்டங்கள் போன்றன காணப்படுகின்றன.

இந்த ஊக்குவிப்புத் திட்டத்துடன், வாடிக்கையாளர்களுக்கு தற்போது தமக்கு பிடித்த BMW அல்லது Hyundai ரக கார்கள், SUV கள் மற்றும் சொகுசான செடான்கள் ஆகியவற்றை போட்டிகரமான விலையில் கொள்வனவு செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும். மேலும் இலகு தவணை கொடுப்பனவுகளையும் இதர பல அனுகூலங்களையும் கொமர்ஷல் வங்கி லீசிங் திட்டத்தினுௗடாக அனுபவிக்க முடியும்.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் ஜுன் 30ஆம் திகதி வரை வழங்கப்படும் இந்த சலுகைத் திட்டத்தினூடாக வாடிக்கையாளர்களுக்கு BMW வாகனங்கள் மீது 50000 ரூபாய் வரையான விலைக்கழிவையும், பரந்தளவு Hyundai வாகனத் தெரிவுகளில் 700000 ரூபாய் வரையான விலைக்கழிவையும் பெற்றுக் கொள்ள முடியும்.

Comments