விருதுகளை சுவீகரித்தவாறே வீறு நடை போடும் Blue Ocean குழுமம் | தினகரன் வாரமஞ்சரி

விருதுகளை சுவீகரித்தவாறே வீறு நடை போடும் Blue Ocean குழுமம்

இலங்கையின் கட்டட நிர்மாணத்துறையில் அசைக்கமுடியாத ஜாம்பவானாகத் திகழும் Blue Ocean குழுமம் பிரகாசமான விற்பனை வாய்ப்புகள் மூலமும் உலகப் பிரசித்திபெற்ற விருதுகளை சுவீகரிப்பதன் மூலமும் தனது முன்னோக்கிய பயணத்தை வெற்றிகரமாக நடத்திச் செல்கிறது. அண்மையில் சிங்கப்பூரில் நடந்த விருது விழா வைபவத்தில் Blue Ocean குழுமத்தின் தலைவரான எஸ். துமிலன் 2017 ஆம் ஆண்டுக்கான “ஆசியாவின் அதியுயர் வர்த்தக நாமம் மற்றும் அதன் தலைமைத்துவத்துக்கான” (Asia’s Greatest Brands & Leaders 2017) விருதை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இந்த விருதுக்கான தெரிவு ஆசியாவின் நூறு முன்னணி வர்த்தகத் தயாரிப்புகளிலிருந்து Asia One சஞ்சிகை மற்றும் United Research Services (URS) மூலம் நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் ஏழு ஆசிய நாடுகளைச் சேர்ந்த 16வர்த்தக நிறுவனங்கள் மற்றும் 52 உப நிறுவனங்கள் கலந்து கொண்டதுடன் முழுத் தெரிவும் உலகப் புகழ் பெற்ற Price Waterhouse Coopers (PWC) அமைப்பினால் மேற்பார்வை செய்யப்பட்டது.

இந்த விருது கிடைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர் Blue Ocean குழுமத்துக்கு சிங்கப்பூரின் PropertyGuru Asia அமைப்பு வழங்கிய “2017 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மிகப்பெரிய கட்டட நிர்மாணத்துறைக்கான” விருதும் (Sri Lanka’s Largest Property Developer) அத்துடன் Best interior Design, Best Condo Architecture மற்றும் Best Sustainable Development விருதுகளும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

தனது நிறுவனம் இத்தகைய விருதுகளைத் தொடர்ந்து சுவீகரித்து வருவதை பற்றி பெருமையடையும் நிறுவனத் தலைவர் எஸ். துமிலன் சுயாதீன அமைப்புகளாலும் நிபுணர்களாலும் நடத்தப்பட்ட தீவிர ஆராய்வுகளின் பின்னர் எமக்கு இந்த விருதுகள் கிடைத்தமை எமக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என நான் கருதுகிறேன். இந்த விருதுகளின் மூலம் எமது ஆற்றல்கள் சரியான திசையில் செல்வதும் அதன் மூலம் நாங்கள் நிலைத்து நிற்கக்கூடியதொரு வர்த்தக நிறுவனம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய அங்கீகாரங்களை பல முறை பெற்றமைக்காக நாங்கள் பெருமைப்படுவதுடன் எமது தாய்நாட்டின் அபிவிருத்திப் பணிகளுக்கு எமது உச்சபட்ச பங்களிப்புகளை வழங்க எம்மால் முடியும் என நம்புகிறோம். இலங்கையின் கட்டட நிர்மாணத்துறையில் முன்னணி வகிக்கும் நாங்கள் எங்களது அயராத முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புகள் மூலம் நாம் சார்ந்த கட்டட நிர்மாணத்துறைக்கு மிகச்சிறந்த சேவையை வழங்கி வருகிறோம்”

Blue Ocean குழுமம் இன்று இலங்கையின் கட்டட நிர்மாணத்துறையில் முன்னணி வகிப்பதுடன் பொறியியல், வர்த்தகம், கல்வி மற்றும் கூட்டுறவு ஆலோசனை உள்ளிட்ட பல துறைகளில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இலங்கையில் ஸ்திரமான காலடியைப் பதித்துள்ள நாம் வெளிநாடுகளிலும், குறிப்பாக ஆசியா, மத்திய கிழக்கு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய ராஜ்யம், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கும் எமது சேவையை விஸ்தரித்துள்ளோம்.

புத்தாக்கம், ஸ்திரமான கொள்கைகள் ஆகியவற்றுடன் நிலையான வளர்ச்சியை நோக்கி உறுதியாக முன்னேறிவரும் 100% இலங்கை நிறுவனமான Blue Ocean பரந்த அனுபவம், தொழில்நுட்ப நிபுணத்துவம், மனித வளம் மற்றும் ஸ்திர நிதி நிலைமை ஆகிய வசதிகளுடன் எத்தகைய நிர்மாணத்தையும் வெற்றிகரமாக மேற்கொள்வதற்கான வல்லமையை பெற்றுள்ளது. இந்தத் திறமைகளைக்கொண்டு இந்நிறுவனம் தற்சமயம் 1100 இல்லங்களை அமைக்கும் 30 பாரிய குடியிருப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. நுவரெலியா, கண்டி, யாழ்ப்பாணம், பொலநறுவை உள்ளிட்ட பல பெரிய நகரங்களில் வாடிக்கையாளர்களுக்கு வசதியான முக்கிய பகுதிகளில் இந்த நிர்மாணப் பணிகள் நடந்து வருகின்றன.

Blue Ocean குழுமத்தை நீண்ட தொலைநோக்குடன் வழிநடத்திச் செல்லும் அதன் தலைவர் துமிலன் இந்நாட்டின் கட்டட நிர்மாணத்துறையில் பாரிய புரட்சியொன்றை ஏற்படுத்த திடசங்கற்பம் கொண்டுள்ளார். இந்த குழுமத்தின் கீழ் இயங்கும் 42 கிளைநிறுவனங்கள் நிர்மாணம் மற்றும் பொறியியல், கட்டட வடிவமைப்பு மற்றும் பொறியியல் ஆலோசனை, வசதிகள் முகாமைத்துவம், கல்வி, ஆடைத்தொழில், போக்குவரத்து, கொங்கிரீட் கலவை தயாரிப்பு, தச்சுத்தொழில், அலுமினியம் தயாரிப்பு, கட்டட மூலப்பொருட்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் கனரக உபகரணங்கள் இறக்குமதிகள் போன்ற பல்வேறு வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ளன. தனது நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க செயற்பாடுகளின் மூலமாக Blue Ocean குழுமம் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட, வெற்றிகரமான வர்த்தக ஜாம்பவானாகத் திகழ முயற்சி செய்து வருகிறது.

''கடந்த பல வருடங்களாக தனது பலத்தை படிப்படியாக பெருக்கி வரும் எமது குழுமம் பல்வேறு வர்த்தகங்களில் தன்னை ஈடுபடுத்தி வருவதுடன் அத்தகைய சகல துறைகளிலும் வெற்றிகரமாக பரிணமித்து வருகிறது. குழுவாக செயற்படுவதன் மூலம் நாங்கள் எங்களது இலக்குகளை எட்டி வருகிறோம். பலத்த போட்டிகளுக்கு மத்தியிலும் நாங்கள் வெற்றிகரமாக செயற்படுவதற்கு இதுவே பிரதான காரணம். கடந்த சில மாதங்களில் எமது வருமானம் கிட்டத்தட்ட 20 பில்லியன் ரூபாவை எட்டியிருப்பது எமது வெற்றிகரமான பயணத்துக்கு சான்றாக அமைவதுடன் அடுத்த சில மாதங்களில் எமது வருமானத்தை மேலும் அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்'' என்கிறார் துமிலன்.

நிர்மாணத்துறை நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப அவர்களால் சமாளிக்கக்கூடிய வகையில் நிர்மாணங்களை மேற்கொள்ளக்கூடிய சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். இந்தத் தேவையைக் கருத்தில் கொண்டு Blue Ocean குழுமம் சில வருடங்களுக்கு முன்னர் லிங்க் இன்ஜினியரிங் (Link Engineering) நிறுவனத்தை தனது குடையின் கீழ் கொண்டு வந்தது. இன்று லிங்க் இன்ஜினியரிங் Blue Ocean வடிவமைக்கும் சகல வானளாவிய கட்டட நிர்மாணப் பணிகளையும் பொறுப்பேற்று சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

பொறுப்பேற்கும் சகல நிர்மாணப்பணிகளையும் செவ்வனே நிறைவேற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றுக்கொள்வதில் உச்சபட்ச அக்கறை செலுத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களையும் உயர் ரக மூலப்பொருட்களையும் பயன்படுத்தி மிகச்சிறப்பான கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

Blue Ocean+ Link Engineering கூட்டிணைப்பில், நிலைத்து நிற்கக்கூடிய, இலாபநோக்குடனான வர்த்தக மற்றும் அரச நிர்மாணத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

வாடிக்கையாளர்களுக்கு சகல ஆலோசனைகளையும் முன்கூட்டியே வழங்கி அவர்களின் தேவைகளை நேர்த்தியாக நிறைவேற்றுவது Blue Ocean நிறுவனத்தின்

சிறப்பம்சமாகும். தனது தொடர்ச்சியான செயற்பாடுகளின் மூலம் வெளிநாடுகளிலும் தனது சேவையை விஸ்தரிக்க முயன்றுவரும் இந்நிறுவனம் சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக திகழ தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

Comments