பிணை முறி அறிக்கையை பெறுவதில் சட்டச் சிக்கல் | தினகரன் வாரமஞ்சரி

பிணை முறி அறிக்கையை பெறுவதில் சட்டச் சிக்கல்

'இரகசியத் தன்மையைப் பேணுவதால் தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது'

நமது நிருபர்

 

பிணை முறிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்ைகயைப் பெற்றுக்ெகாடுப்பதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுவதாக தேசிய சுவடிகள் கூடத் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்ைக கள் தொடர்பில், திணைக்களம் ஒரு இரகசிய உடன்படிக்ைகயைப் பேணி வருவதால், அறிக்ைகயின் விபரங்களை வெளியிடுவதில் சட்டச்சிக்கல் உள்ளதென்று திணைக்களம் நேற்று விடுத்துள்ள அறிக்ைகயொன்றில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவினது அறிக்ைக யின் ரகசியத்தன்மையைப் பேணுவது தொடர்பாக, வெளிப்படுத்தப்படாத உடன்பாடு ஏற்படுத்திக்ெகாள்ளப்பட்டிருப்பதால், தகவல் அறியும் சட்டத்தின் கீழேனும், குறித்த ஆவணங்களைப் பகிரங்கப்படுத்த முடியாது என்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நதீர ரூபசிங்க விடுத்துள்ள அறிக்ைகயில் தெளிவுபடுத்தியுள்ளார்.

1981ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க தேசிய காப்பக திருத்தச்சட்டத்தின்படி, 1973ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க தேசிய காப்பக சட்டத்தின் 11ஆம் பிரிவின் கீழ், ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவுற்ற மூன்று மாதகாலத்திற்குள், அதுபற்றிய அறிக்ைககளை தேசிய காப்பகத்திற்கு (சுவடிகள் கூடத்திற்கு)ப் பொறுப்பளிக்க வேண்டியது ஆ​ைணக்குழுவின் செயலாளரது பொறுப்பாகும்.

அதற்கிணங்க, 2015 பெப்ரவரி முதலாந்திகதி முதல் 2016 மார்ச் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், இடம்பெற்ற பிணைமுறி விநியோகச் செயற்பாடுகளை ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, அதனுடைய இறுதி அறிக்ைகயையும் பிற்சேர்க்ைககளையும் கடந்த 2018 ஜனவரி 19ஆம் திகதியும் 2018 மார்ச் 31ஆம் திகதியும் ஆணைக்குழுவின் செயலாளர், சுவடிகள் கூடத் திணைக்களத்திற்குக் கையளித்துள்ளார். எனினும், 1978 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள

வர்த்தமானி அறிவித்தல் ஒழுங்குவிதிகளின் கீழ், இறுதி அறிக்ைக தவிர்ந்த ஏனைய பின்னிணைப்புகள் 30 ஆண்டு காலத்திற்கு மூடப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு கோட்டை நீதவானின் உத்தரவுப்படி, ஆணைக்குழுவின் இறுதி அறிக்ைகயின் பின்னிணைப்பு இரண்டின் மூலப்பிரதிகளை ஆணைக்குழுவின் செயலாளர், குற்றப்புலானாய்வு பிரிவினரிடம் கையளித்திருக்கிறார். எனினும், பின்னிணைப்பு இரண்டின் பிரதிகள், சுவடிகூடத் திணைக்களத்திற்கும் கையளிக்கப்பட்டுள்ளன.

ஆணைக்குழுவின் அறிக்ைககள் குறித்து தேசிய சுவடிகூடத் திணைக்களம் இரகசிய உடன்பாட்டைப் பேணி வருவதால், அதனைப் பகிரங்கப்படுத்துவதற்கு ஜனாதிபதியின் செயலாளரது எழுத்து மூல அனுமதி கிடைக்கப்பெற வேண்டும்.

எவ்வாறாயினும், அறிக்ைககளின் ரகசியத்தன்மையைப் பேணுவதற்குத் திணைக்களம் கட்டுப்பட்டுள்ள நிபந்தனைகளின் கீழ், தகவல் அறியும் சட்டத்தின் கீழும் தகவல்களைப் பகிரங்கப்படுத்த முடியாது, என்றும் தேசிய சுவடிகூடத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்ைகயில் குறிப்பிட்டுள்ளார்.

பிணை முறி மோசடி விவகாரத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் பர்பச்சுவல் ரெஷறீஸ் நிறுவனத்தின் உரிமையாளரான அர்ஜுன் அலோசியஸிடமிருந்து 118 அரசியல்வாதிகள் பணம் பெற்றுக்ெகாண்டிருப்பதாக, ஆணைக்குழுவின் அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது. இதனால், ஆணைக்குழுவின் அறிக்ைகயில் உள்ள பெயர் விபரங்களை வௌியிடுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்குப் பல்வேறு தரப்பிலும் கோரிக்ைக விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆணைக்குழுவின் அறிக்ைகயை வெளியிடுவதில் உள்ள சட்டச்சிக்கல்களைத் தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, சட்டா மாஅதிபர் திணைக்களத்தைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (வி)

Comments