புதிய பயணத்தில் தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயம் | தினகரன் வாரமஞ்சரி

புதிய பயணத்தில் தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயம்

ஒரு சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட மண்சரிவினால் தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயத்தின் ஒரு கட்டடம் மாணவர்கள் கல்வி பயில முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டது. அதன் பின்பு அப்பாடசாலை அமைந்துள்ள நிலப்பரப்பில் மண்ணை எடுத்து ஆய்வுக்குட்படுத்திய புவியியலாளர்கள் பாடசாலை அமைந்துள்ள நிலப்பரப்பு மண்சரிவு அபாயம் உள்ளதாக அறிவித்தார்கள்.

உண்மை இதுவாக இருந்தும் தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயத்தை பிறிதொரு இடத்திற்கு மாற்றும்படி பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் சபரகமுவ மாகாண சபை அதுவிடயத்தில் கரிசனை காட்டவில்லை. மாறாக சபரகமுவ மாகாண கல்வி அமைச்சு இடைக்கால ஏற்பாடாக தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தெஹியோவிற்ற தேசிய பாடசாலையில் மாலை நேரங்களில் வகுப்புகளைத் தொடர ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனால் இந்த ஏற்பாடு தூர இடங்களிலிருந்து கல்வி பயிலவரும் மாணவர்களுக்கு பல வழிகளிலும் அசௌகரியங்களை ஏற்படுத்தியதனால் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள வித்தியாலய கட்டடத்திலேயே கல்வி நடவடிக்கைகளைத் தொடர பாடசாலை அதிபரினால் ஏற்பாடு செய்யப்பட்டது பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஒப்புதலோடு.

தெஹியோவிற்ற தமிழ் வித்தியாலயத்தின் கட்டடங்களுக்கு மண்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி தினகரன் வாரமஞ்சரி கடந்த 2017.12.17 ஆம் திகதி அதன் மலைக்கதிர் பக்கத்தில் “காணி ஒதுக்கினால் போதாது;

கட்டட நிர்மாணத்துக்கான நிதியும் ஒதுக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியிருந்தது. சபரகமுவ மாகாண கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட பாடசாலைக்காக ஒதுக்கப்பட்டுள்ள தெஹியோவிற்ற கல்வி வலய காரியாலயத்திற்கருகில் களனிவெளி பிளாண்டேஷனால் நிர்வகிக்கப்படும் தேவாலகந்தை தோட்டத்தில் (ஈரியகொல்ல) இரண்டு ஏக்கர் காணியில் 110x25 அளவிலான மூன்று மாடிக் கட்டடத்தை அமைக்க அளவிடும் நடவடிக்கைகளை சில வாரங்களுக்கு முன்பு மேற்கொண்டு உரிய கட்டடத்திற்கான நிதியை ஒதுக்கவும் ஏற்பாடு செய்திருந்தது.

அதன் பின்பு தினகரன் வாரமஞ்சரி கடந்த 2018.05.13ஆம் திகதி அதனது மலைக்கதிர் பக்கத்தில் தெஹியோவிற்ற தமிழ் மகாவித்தியாலயத்தின் தற்போதைய நிலைபற்றியும் அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உரியமுறையில் அமையாது விட்டால் அவர்களின் நிலை என்னவாகும் என விரிவாக குறிப்பிட்டு அந்த விடயத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு சென்றதனால் ("அதிகாரிகளின் கண்களுக்கு புலப்படாத தெஹியோவிற்ற தமிழ் மகா வித்தியாலயம்" என்னும் தலையங்கத்தின் கீழான கட்டுரையின் மூலம்) கல்வி ராஜாங்க அமைச்சர் கடந்த 2017.08.25 ஆம் திகதி

(தொடர் --21 பக்கம்)

சி.ப. சீலன்

Comments