எலிபன்ட் ஹவுஸின் ‘Go Sugar Free’ | தினகரன் வாரமஞ்சரி

எலிபன்ட் ஹவுஸின் ‘Go Sugar Free’

இலங்கைக்கே உரித்தான எலிபன்ட் ஹவுஸ் குளிர்பானம் “Go Sugar Free” என்ற முயற்சியின் கீழ் பல்வேறு உள்ளூர் குடிபான வகைகளுக்கு சீனியற்ற பதிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. எலிபன்ட் ஹவுஸின் கிறீம் சோடா, EGB, நெக்டோ மற்றும் ஒரேஞ்ச் கிரஷ் போன்ற குடிபானங்களில் சீனியற்ற பதிப்புக்கள் நாடு முழுவதிலும் உள்ள சூப்பர் மார்க்கட்டுக்கள் மற்றும் சில்லறைக் கடைகளில் கிடைக்கின்றன.

வாடிக்கையாளர்களை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி நகர்த்திச்செல்லும் நோக்கிலேயே இப் புதிய பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உற்பத்திகளுக்கான இலச்சினை பச்சை நிறத்தைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் இயற்கை என்பவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், இந்த யோசனையை முன்நோக்கி நகர்த்திச் செல்லும் வகையில் இரு அம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இதற்கு மேலதிகமாக, குளிர்பானங்கள் ஆரோக்கியமானவை என்பதைச் சித்தரிக்கும் வகையில் வேண்டுமென்றே அம்புகளின் நிழல்கள் அதிகரித்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வர்த்தகநாமப்படுத்தல் மற்றும் வடிவமைப்பு என்பன ஏற்கனவே உள்ள வர்த்தகநாமப்படுத்தும் நபர்களை உள்ளடக்கியிருப்பதுடன், பல விருதுகளை வென்றுள்ள எலிபன்ட் ஹவுஸ் குடிபான வர்த்தக நாமங்கள் நிறுவனத்துக்கு பலம் சேர்த்துள்ளன.

“Go Sugar Free” குடிபானங்கள் எலிபன்ட் ஹவுஸின் அடையாளங்களான சுவையை மாற்றாத வகையில் அமைந்திருக்கும் அதேநேரம், அவற்றில் சீனி கலக்கப்பட்டிருக்காது. இலங்கையின் திறமையான உணவு விஞ்ஞானிகளைக் கொண்டு எலிபன்ட் ஹவுஸ் நடத்திய தனித்துவமான ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த புத்தாக்கம் அமைந்துள்ளது. எலிபன்ட் ஹவுஸ் குளிர்பானங்களில் காணப்படும் தனித்துவமான அசல் சுவையை இந்தக் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறதா என்பது பல்வேறு நுகர்வோருக்கு வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்தக் குடிபானங்களுக்கு உள்ளூரில் அதிக மதிப்பு காணப்படும்.

புகழ்பெற்ற பானங்களின் அசலான சுவையைப் பெறும் நோக்கில் எலிபன்ட் ஹவுஸ் Stevia வை உள்ளடக்கியிருப்பதுடன், தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட சுவையூட்டிகள் மாத்திரமே கலக்கப்பட்டுள்ளது.

எனவே, எலிபன்ட் ஹவுஸ் குளிர்பான வாடிக்கையாளர்கள் சுவைக்கான அர்பணிப்புக்களை செய்யாது தொடர்ந்தும் உன்னதமான சுவையை அனுபவிக்க முடியும்.

Comments