கிரிஉல்ல நகரில் செலான் வங்கியின் புதிய கிளை | தினகரன் வாரமஞ்சரி

கிரிஉல்ல நகரில் செலான் வங்கியின் புதிய கிளை

செளகரியமான வங்கியியல் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் வகையில், அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, தனது புதிய கிளையை, இல. 27,மஹா வீதி, கிரிஉல்ல எனும் முகவரியில் அண்மையில் திறந்திருந்தது.

செலான் வங்கியின் உயர் முகாமைத்துவ அணியினர், வாடிக்கையாளர்கள் மற்றும் இதரவிருந்தினர்கள் இந்த புதிய கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டனர்.

புதிய கிரிஉல்ல கிளை, வார நாட்களில் மு.ப. 9.00 முதல் பி.ப. 4.00 மணிவரை திறந்திருக்கும். கிரிஉல்ல நகரை அண்மித்து வசிக்கும் செலான் வங்கியின் வாடிக்கையாளர்கள் தற்போது இந்த கிளைக்கு விஜயம் செய்து, தமது வங்கியியல் மற்றும் நிதியியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.

30 வருடகாலமாக வங்கிச் சேவைகளை அன்புடன் அரவணைத்து வழங்கி வரும் செலான் வங்கி, வாடிக்கையாளருக்கு மிகவும் அண்மித்த நிலைக்கு வங்கியை கொண்டு வருவதில் பெருமிதம் கொள்கிறது. தனது கிளை வலையமைப்பை நாடு முழுவதிலும் விஸ்தரித்து வருவதுடன், 25 மாவட்டங்களில் தனது பிரசன்னத்தை உறுதி செய்துள்ளது.

“தொடர்ச்சியான மேம்பாடு”என்பது நிறுவனத்தின் பெறுமதிகளில் ஒன்றாக அமைந்துள்ளதுடன்,நவீன தொழில்நுட்பத்தினூடாக சிறந்த மற்றும் மிருதுவான வங்கியியல் அனுபவத்தை வழங்கி வருகிறது.

Comments