DIMO Agribusinesses அலுவலகம் சப்புகஸ்கந்தையில் | தினகரன் வாரமஞ்சரி

DIMO Agribusinesses அலுவலகம் சப்புகஸ்கந்தையில்

Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்தின் விவசாய வர்த்தகப் பிரிவான DIMO Agribusinesses, விவசாயத்துறையின்/சமூகத்தின் தேவைகளை ஈடுசெய்யும் முகமாக சப்புகஸ்கந்தை, மாகொலையில் புதிய அலுவலகத்தை திறந்துள்ளது.

DIMO உர வகைகள், விதைகள் மற்றும் விவசாய- சிறப்பு உற்பத்திகள் உள்ளடங்கலாக, DIMO இன் விவசாயம் தொடர்புபட்ட அனைத்து தொழிற்பாடுகளினதும் மையமாக இப்புதிய அலுவலகம் தொழிற்படவுள்ளது. உணவுத்துறையில் நிபுணத்துவத்துடன் விவசாயத் துறையில் தனது செயற்பாடுகளை நிறுவனம் தொடர்ந்தும் விஸ்தரிப்பு செய்து வருகின்ற நிலையிலும், எதிர்வரும் ஆண்டுகளில் தனது தொழிற்பாடுகளை சர்வதேச ரீதியாக விஸ்தரிப்பதற்கு திட்டமிட்டுள்ளமையாலும், இப்புதிய அலுவலகமானது நிறுவனத்தின் எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தையும் கையாளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

DIMO இன் விவசாய சிறப்புச் செயற்திட்டங்கள் பிரிவின் பொது முகாமையாளரான பிரியங்க தெமட்டாவ கூறுகையில், “DIMO Agribusinesses இன் வளர்ச்சி மாற்றத்தில் இது முக்கியமானதொரு படியாகும்.

'அடுத்த தலைமுறை விவசாயம்' என்ற எமது மகுட வாக்கியத்திற்கு அமைவாக, இலங்கையின் பாரம்பரிய விவசாயத்தை நவீன, உயர்-தொழில்நுட்ப விவசாயமாக மாற்றியமைப்பதற்கு DIMO Agribusinesses பங்களிப்பாற்றுவதுடன், ஒவ்வொரு வியாபாரத்துறை மீதும் சிறப்பாக கவனம் செலுத்தி, வியாபாரப் பிரிவுகள் மத்தியில் சிறப்பான வளப்பகிர்வுடன் அதியுச்ச பயன்பாட்டிற்கான வாய்ப்பினை எமக்கு வழங்கி, அவற்றை முன்னெடுக்க எமக்கு அணுசரனையளிக்கும். வேறுபட்ட வியாபாரப் பிரிவுகள் மத்தியில் சிறப்பான இணைப்பாடலுக்கும் இது அணுசரனையளிப்பதுடன் வலுவான, இடைத்தொழிற்பாட்டு அணிகளை கட்டியெழுப்பவும் உதவும் என்றார் பிரியங்க.

Comments