சுவன மலர் தூவும் சுகந்த நோன்பு! | தினகரன் வாரமஞ்சரி

சுவன மலர் தூவும் சுகந்த நோன்பு!

காவலூர்க்கவிஞன்

 

மன்னிக்கும் காலம், மக்கள் மனம் திறக்கும் காலம்

திருந்தி வாழும் காலம், தீங்கு மறைந்த காலம்

மனித நேயத்துக்கு மாறான வாழ்வும்

உண்மையில்லாத தன்மையும், ஊருடன் பகையும்

இல்லாது வாழ்ந்து இறையருள் பெற்றிட

நோன்பினை நோற்றுப் பூரணராகுங்கள்

மாக்களாக இன்றி மக்களாய் வாழுங்கள்

நபிகளின் இறை வாழ்வை எண்ணித் துதியுங்கள்

இறையருளேடு ஒப்புரவாகுங்கள்

செய்த பிழைக்கு மனதார வருந்துங்கள்

வந்த வழியில் தடுமாற்றமிருந்தால்

சொல்லும் பாதையைத் தெரிந்து அடி வையுங்கள்

பகிர்ந்துண்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்

பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள்

ஐம்பெரும் கடமைகளின் அம்சமான நோன்பு

அல்லாஹ்வின் கடமைகளை நிறைவேற்றும் நோன்பு

ஈமான் கொண்டவர்கள் நோற்பதும் நோன்பு

ஈல்லறத்தில் நல்லறமாய் இருப்பது நோன்பு

நரகில் இருந்தெம்மைக் காப்பது நோன்பு

சுவர்க்கத்துக்கு மலர்களை அள்ளித் தரும் நோன்பு

பிரதிபலன்கருகாது உதவுவது நோன்பு

பெரியாரைக் கனம் பண்ணி வாழ்வதும் நோன்பு

Comments