முக்கிய கட்சியில் நடிகை வரலட்சுமி? | தினகரன் வாரமஞ்சரி

முக்கிய கட்சியில் நடிகை வரலட்சுமி?

 


நடிகை வரலட்சுமி படங்களில் முக்கிய வேடங்களில் அடுத்தடுத்து நடித்து வருபவர். அழுத்தமான வேடங்களில் அவரின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அவர் சேவ் சக்தி என்ற பெண்களுக்கான நல அமைப்பை நடத்தி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளிதரராவை சென்னையில் நேரில் சந்தித்தார். இதனால் அவர் அக்கட்சியில் இணைந்து விட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து அவர் வெளியிட்ட தகவலில் அந்த வதந்திகள் ஆதாரமற்றவை. நான் எந்த கட்சியிலும் சேரவில்லை.

பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசினோம். அவ்வளவு தான் என கூறினார். உண்மை என்னவெனில் அக்கட்சி 2019 மக்களவை தேர்தலுக்காக ஆதரவு திரட்டுவதற்காகத்தானாம். இதற்காக தான் கட்சியை சேர்ந்தவரை பிரபலங்களை சந்தித்து வருகிறார்கள்.

Comments