மூச்சு சஞ்சரித்துப் போச்சு | தினகரன் வாரமஞ்சரி

மூச்சு சஞ்சரித்துப் போச்சு

கிண்ணியா 
மஜீத் ராவுத்தர்
 
 

ஒரு வார காலமாக அந்த தொழில் காலத்தில் எந்த தொழிலும் நடைபெறவில்லை. மனித நடமாற்றம் அற்ற மூடிய பாழ்நிலை. சாமான்கள் ஏற்றுமதிக்கும் மூலப் பொருட்கள் இறக்குமதிக்கும் ஏற்றி இறக்கல் வாகனம் நெரிசலை சீர்செய்யும் செக்குரிட்டிகளையும் சேர்த்து சுமார் நூற்றைம்பதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மட்டும் எழுதுனர்கள். தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பொறியியலாளர்கள் என அதுவேறு தொழிலாளர் மேற்பார்வை எல்.எஸ். மார்கள் ஆறுபேர்கள் வரை.

அந்த ஆறு பேர்களில் சீனியர் மேற்பார்வையாளன் தான் வாலித் அகமட், வாலித் சொல்லே அந்த தொழில் பேட்டையில் அரங்கேறும். முதலாளி முதல் சாதாரண தொழிலாளி ஈறாக நன் மதிப்புப் பெற்ற ஒரு கீழ்படிவுள்ள ஊழியன்.

எத்தனையோ தொழிலாளர் சங்கங்களின் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்து தீர்வு காண்பதில் வல்லவன். வாலித், யூனிபோர்ம், புள்வுஸ், சூ போன்ற சின்னப் பிரச்சினை தொடங்கி சம்பளம், எலவன்ஸ், ஈ.பி.எப், ஈ.ரீ.எப் போன்ற பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து முதலாளிக்கும் தொழிலாளிக்கும் நடுவராக நின்று நியாயம் என்ற பதத்துக்கு கௌரவம் கொடுத்து பெருகூட்டக் கூடிய திறமையான ஒரு பொபியுளர் மேன் தான், ஒரு சீனியர் எல்.எஸ்.தான் வாலித் அகமட்.

நபி இப்றாஹிம் (அலை)க்கு ஒரு பிரவுன் போல, நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ஒரு அபுஜகில் போல, காந்திக்கு ஒரு கோட்சே போல அசாதாரண மனிதப் புனிதர்களுக்கும் ஒவ்வொரு வில்லன்களும் இருந்துதான் இருக்கிறார்கள்.

இந்த சாதாரண மனிதன் வாலித் அகமட்க்கு வில்லன் இருக்க நியதி இல்லாமல் இருக்க முடியாது.

யூனியன் தலைவர் யுனைத்தும் வாலித் அகமட்டும் எப்போதும் மோதிக் கொண்டே இருப்பார்கள். என்ன சமாச்சாரம் என்றில்லை மோதல் தான் ஆனால் பெருந்தன்மை உள்ள வாலிபத் மைன்ட் பண்ணுவதில்லை. யூனியன் தலைவர் யுனைத்துன் மனதில் ‘கிறாஜ்’ குன்றாக வளர்ந்து கொண்டே வந்தது. அதற்கு காரணம் யூனியன் உபதலைவர் பஸீரின் முட்டால்தான்.

பஸீருக்குத்தான் யூனியன் உபதலைவனை விட்டு தலைவனாக வேண்டும் என்ற தலைமைத்துவ மோகம் தலைக்கேறி அங்கால் வாலித் பக்கமும் இங்கால் யுனைத்துப் பக்கமும் அண்டி அண்டி யுனைத்துக்கு விஷம் ஏற்றிவிட்டான். அதன் உச்சம்தான் பஸீருக்கும் யுனைத்துக்கும் தழுதழுத்த உறவாக இருந்து முற்றிய பகையாக உருவெடுத்து ஈற்றில் மனிதரில் மாணிக்கம் வாலித் அகமட் கொலை செய்யப்பட்டான்.

அந்த சோக ஆழிக்கடலிலே பெரும் ஆலை ஒருவாரகாலமாக மூழ்கிக்கிடக்கிறது.

யுனைத் கொலைக்காரன் கைது செய்யப்பட்டான். பிணை மறுக்கப்பட்டது. வருடம் ஒன்று விளக்கமறியலில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவன் உறவுகள் பொறுக்க முடியாது துயரில் மேன்முறையீடு செய்தனர். மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் பிணையில் வெளியில் விட அனுமதி வழங்கப்படவில்லை.

இன்று யுனைத்தின் மேற்முறையீட்டு வழக்கு கூப்பிடப் போகிறார்கள். கொலைக் குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு சிறைச்சாலை வாகனத்தில் வந்தான். கைதிகள் கூண்டில் அடைக்கப்பட்டான். ஆனால் அவனும் நீதிமன்ற வளாகத்திலும் நீதிமன்றிலும் ஆவளாய் அதி எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த அட்வகேட் அபுல் கலாம் இன்னும் கொழும்பில் இருந்து வரவில்லை.

அதோ பளிச் சென்ற சாம்பல் கார் ஒன்று நீதிமன்ற வளாக வாகனம் நிறுத்துமிடம் நோக்கிச் சென்று அது நிச்சயமாக கிழக்கு மாகாண வாகனமில்லை ஏனென்றால் wp-53647 என்ற இலக்கம் மேல் மாகாணத்துக்குரியது. ரைவர் விரைந்து வந்து கார்க் கதவை திறந்து கொண்டு முன்னே மன்று நோக்கி செல்ல ரைவர் கதவைப் பிடித்தபடி பின்னே உதவி லோயர் ஒரு கட்டுப்புத்தக்கத்துடன் மூன்று நான்கு சட்டக்கோவையுடன் எழுதுநர் இன்னும் சில தாள் தாவேஜூதுகளுடன் சேவகன் எல்லாமாக நால்வர் இன்னொருவர் ரைவர் கதவுகளைப் பூட்டி ஏ.சியை ஓப் பண்ணி திறப்பை எடுத்துக் கொண்டு விரைந்தான்.

உள்ளே சென்ற அட்வகேட் அபுல் கலாம் கைதிகள் கூட்டை நோக்கிச் சென்று யுனைத்துடன் காதோடு வாய் முட்ட ஏதோ குசு குசுத்துவிட்டு வந்தவர். தலையைக் குனிந்து நிமிர்ந்து நீதிபதியை நோக்கி அமர்ந்தார்.

எல்லார் பார்வையும் அபுல்கலாம் மீதே மொய்த்தது நீதிபதியும் நோக்கிய திசையை வாதிட்டுக் கொண்டிருந்த அட்வகேட்டும் திரும்பி நோட்டம் இட்டுக்கொண்டார். தனது வாதாட்டத்தை மீண்டும் தொடர்ந்தார்.

வழக்கு இல :- ஏ.எல்/6974 யுனைதீன் றிமாண்ட் இலக்கம் முதலி கூவினான். யுனைதீன் குற்றவாளிக் கூண்டில், அபுல் கலாம் எழுந்தார். கனம் கோட்டார் அவர்களே! குற்றம் சாட்டப்பட்ட இவர் ஆப்த நண்பர் கொலை செய்த தினத்துக்கு முன் மூன்று தினத்திற்கு முன்னர் லீவில் சென்றிருக்கிறார். லீவுக் கடிதப் பிரதி தினவரவு இடாப்பில் கையெழுத்து இடப்படவில்லை. என்ற அத்தாட்சிப் பிரதி இவைகளை எல்லாம் விட கொழும்பில் இருந்திருக்கிறார் ஒரு பெண்ணுடன் லொஜில் தங்கி இருந்திருக்கிறார். லொஜ்ஜால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டு இவ்வளவு ஆதாரங்களும் ஆரம்பத்தில் எடுத்துக் காட்டப்படவில்லை ஏன்?

அட்வகேட் அபுல் கலமே கேள்வி எழுப்பினார். எல்லார் மனதிலும் உந்திய கேள்விக்குறி ஏக காலத்தில் அனைவர் முகத்திலும் தோன்றியது.

'அந்தப் பெண் யார்?' என்ற கேள்வி எழும். சொன்னால் தன் நண்பனாகிய பேர் பெற்ற எனது மதிப்புக்குறிய களங்கம் ஏற்பட்டுவிடும் என்ற நட்பின் காரணமே இவர் இந்த உண்மையை மறைத்திருக்கிறார்.

பணத்திற்காக மானம், மரியாதை கௌரவம் விலை போவதைக் கண்ட எத்தனையோ வழக்குகளில் கண்ட நீதிபதி புகழுக்காகவும் மனசாட்சி விற்கப்படுவதை அவர் மனம் கொந்தளித்து அலைமோதியது. என்ன செய்ய அட்வகேட் அபுல் கலாமின் வாதத் திறமை நிரூபன ஆதாரங்கள் குற்றவாளி விடுதலை செய்யப்படுகின்றான்.

வருடங்கள் இரண்டு சிறைக்குள் அடைக்கப்பட்டுக் கிடந்த பறவை சுதந்திரமாகச் சிறகடித்துப்பறக்கும் மகிழ்ச்சி யுனைதீன் மகிழ்ச்சிக்கு காலடி இருந்திருந்தால் அந்தக் கால் தூசுக்கு நிகராக காரை திறந்து கொடுத்த ரைவரைக் கவனிக்கவில்லை உதவி லோயரை, ஏன் ‘பொடி’ காட்டையும் கவனிக்கவில்லை அபுல் கலாம் யுனைத்தையே கவனித்து ஏறுமாறு சமிக்கை காட்டினார். கார் விரைந்தது.

கொழும்புக்குப் போக வேண்டியவர் அபுல்கலாம் யுனைதீன் அழைப்பை ஏற்று கிண்ணியாவையும் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாளைய ஆசையும் சேர்ந்தே அவரின் கார் கிண்ணியாவை நோக்கிப் பறந்தது என்றுதான் சொல்ல வேண்டும். என்றாலும் துறை கடக்க பாதையில் கார் ஏற்றுவது கஷ்டமாக இருக்குமே என்ற கவலை ரைவர் மனதில் ஐய உணர்வுடன் வினா எழுப்பியது.

‘எயா போசை’ தாண்ட முன்னால் வந்த பம்பராஹவுஸ் பெண்டில் கார் புரண்டது பள்ளத்தில் விழவில்லை. ரைவருக்கு உரைசல் காயம் ஆனால் யுனைத் மூச்சு மட்டும் சஞ்சரித்துப் போச்சு.

Comments