இலங்கை மாணவர்களுக்காக அவுஸ்திரேலியாவின் La Trobe பிஸ்னஸ் ஸ்கூலின் புதிய கற்கை நெறி | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை மாணவர்களுக்காக அவுஸ்திரேலியாவின் La Trobe பிஸ்னஸ் ஸ்கூலின் புதிய கற்கை நெறி

இலங்கையின் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை பற்றி அறிவிக்கும் வகையில், La Trobe பிஸ்னஸ் கூலின் பீடாதிபதியும், தலைவருமான பேராசிரியர் ஜேன் ஹமில்டன் தலைமையிலான குழு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.

இலங்கையிலிருந்து அதிகளவான மாணவர்கள் La Trobe பிஸ்னஸ் ஸ்கூலின் கற்கைகளில் ஈடுபாடு செலுத்தும் வகையில், ஜனவரியில், பட்டப் பின்படிப்பு வியாபார கற்கைகளை அறிமுகம் செய்தது. நவம்பர் மாதத்தின் பட்டமுன் படிப்பு மற்றும் பட்டப்பின்படிப்பு கற்கைகளுக்கு மேலதிகமாக இக்கற்கை அறிமுகம் செய்யப்பட்டது. நவம்பர் மாத மாணவர் சேர்ப்பு என்பது, பெப்ரவரி மற்றும் ஜுலை மாத கற்கைநெறிகளுக்கு மாணவர் சேர்ப்புக்கு மேலதிகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

La Trobe பிஸ்னஸ் ஸ்கூல், சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டப் பின்படிப்பு கற்கைகளுக்கு மூன்றாம் செமிஸ்டர் கற்கைகளை அறிமுகம் செய்திருக்கிறது. இவை தற்போது இலங்கை மாணவர்கள் மத்தியில் புகழ்பெற்றுள்ளன. மேலும், துறையின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையிலான புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், தொழில் சந்தைக்கு பொருத்தமான வகையிலும் இவை அமைந்துள்ளன.

பேராசிரியர் ஜேன் ஹமில்டன் கருத்துத் தெரிவிக்கையில்,La Trobe பல்கலைக்கழகத்தினால் எமது பிராந்தியத்தில் காணப்படும் பிரதான நாடுகளுடன் கைகோர்க்க காண்பிக்கும் உறுதியான ஈடுபாடு மற்றும் மாணவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றமை போன்றன இலங்கைக்கு La Trobe பிஸ்னஸ் ஸ்கூலை மீள கொண்டு வருவதற்கு ஏதுவாக அமைந்திருந்தன. புதிய ஜனவரி மாணவர் சேர்ப்புடன், ஒரு வருடத்தில் மூன்று மாணவர் சேர்ப்புகளை வழங்குகிறது.

அத்துடன், இலங்கையின் திறமை வாய்ந்த மாணவர்களுக்கு தமது உயர் கல்வியை தொடர்வதற்கு புலமைப்பரிசில்களையும் வழங்குகிறது. La Trobe பிஸ்னஸ் ஸ்கூலில் புத்தம் புதிய வசதிகளுடன் மாணவர்களுக்கு அதிகளவு அனுகூலங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன என்றார்.

21ஆம் நூற்றாண்டில் வியாபார சூழலுக்கு ஏற்றவகையில் மாணவர்களை மாற்றியமைக்கும் வகையில் La Trobe பல்கலைக்கழகத்தின் MBA கற்கைகள் அமைந்துள்ளன.

Comments