Biz Quiz 2018 இல் IT/Software பிரிவின் வெற்றியாளராக 99X Technology | தினகரன் வாரமஞ்சரி

Biz Quiz 2018 இல் IT/Software பிரிவின் வெற்றியாளராக 99X Technology

Glitz Biz Quiz 2018 நிகழ்வில் ஒருபுள்ளி வித்தியாசத்தில் 99X Technology இரண்டாமிடத்துக்கு தெரிவாகியிருக்கிறது. 99X Technology Quiz அணியில் இணை தொழில்நுட்ப லீட்களான ஷிரந்த டி அல்விஸ் மற்றும் ரங்கித குருப்பு, சிரேஷ்ட தொழில்நுட்ப லீட் சுதத் தேநுவர ஆகியோர் அடங்கியிருந்தனர். இவர்கள் 30 கூட்டாண்மை அணிகளுடன் போட்டியிட்டதுடன், சுமார் 50 வினாக்களுக்கு முகங்கொடுத்திருந்தனர். இவர்களின் திறமையான செயற்பாட்டினூடாக, தொடர்ச்சியான ஆறாவது ஆண்டாக இவர்களுக்கு IT/Software பிரிவில் வெற்றியீட்ட முடிந்ததுடன், சகல பிரிவுகளிலும் இரண்டாமிடத்தை சுவீகரிக்கவும் முடிந்தது.

கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்ற இந்த quiz நிகழ்வில், டயலொக் அக்ஸியாடா, மக்கள் வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, DFCC வங்கி, செலான் வங்கி மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் போன்ற நிறுவனங்களின் போட்டியாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

Comments