TVS – Apache அனுசரணையில் சியத Mr WORLD போட்டி | தினகரன் வாரமஞ்சரி

TVS – Apache அனுசரணையில் சியத Mr WORLD போட்டி

சர்வதேச நிலைக்கு சென்றடைய எமது இளைஞர்களுக்கு உதவிகளை பெற்றுக் கொடுக்கும் வகையில்,புகழ்பெற்ற வாகனங்கள் வர்த்தகநாமமான TVS, சியத தொலைக்காட்சியுடன் இணைந்து சியத Mr.வேர்ள்ட் போட்டியை அறிமுகம் செய்துள்ளது. இப்போட்டியின் வெற்றியாளருக்கு புத்தம் புதிய TVSApache RTR 200 மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படுகிறது.

கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில் TVS லங்காவின் பிரதம நிறைவேற்றதிகாரி ரவி லியனகே இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டதுடன் Model Shop பணிப்பாளர்களான சங்கீதா வீரரத்ன மற்றும் தனஞ்ஜய பண்டார ஆகியோருக்கு பரிசுகளை கையளித்திருந்தார். இந்நிகழ்வில்,Racing “DNA”க்காக அதிகளவு புகழ்பெற்ற TVS Apache RTR 200 மோட்டார் சைக்கிள் நாடுமுழுவதும் பயணித்து, போட்டியாளர்களின் நகரங்களைச் சேர்ந்த நலன் விரும்பிகளிடமிருந்து கருத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கையும் அறிமுகம் செய்யப்பட்டது.

சியத Mr. வேர்ள்ட் போட்டிமின் பேஜன்ட் நிகழ்வுகள் சிலதைகொண்டிருக்கும். இதில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாககடினமான சவால் அடங்குகிறது. TVS சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட மினி பேஜன்ட் நிகழ்வாக இது அமைந்துள்ளது. போட்டியாளர் மத்தியில் வலிமை, ஆற்றல் மற்றும் இயலுமையுடன் போட்டியிடக்கூடிய நிலையை சோதிக்கும் வகையில் அமைந்தது. “கடினமான சவால்நிகழ்வு கட்டுகுருந்த பந்தயத்திடலில் இடம்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில், மோட்டார் சைக்கிள் சாகசங்களும் இடம்பெறும். மேலும், சியத Mr. வேர்ள்ட் போட்டியாளர்கள் தமது நிகழ்வின் ஒரு அங்கமாக புத்தம் புதிய Apache சைக்கிள்களை பரிசோதனை ஓட்டத்தை மேற்கொண்டு பார்க்கக்கூடியதாக இருந்தது.

சியத Mr. வேர்ள்ட் போட்டிக்கு நிகராக, TVS Popular சியத Mr. வேர்ள்ட் போட்டியை டிஜிட்டல் கட்டமைப்பிலும் TVS ஆரம்பித்துள்ளது. TVS Popular சியத Mr. வேர்ள்ட் வெற்றியாளர் வாக்களிப்பிலிருந்து சுமார் 20 போட்டியாளர்களிடமிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.

Comments