''நான் செய்த புண்ணியம் தான் என்னைக் காப்பாற்றியது'' | தினகரன் வாரமஞ்சரி

''நான் செய்த புண்ணியம் தான் என்னைக் காப்பாற்றியது''

திருமணம் ஆனால் என்ன என்னால் சினிமாவில் வெற்றிகரமாக பயணிக்க முடியும் என்று சாதனை செய்து வருபவர் நடிகை சமந்தா.

திருமணத்திற்கு பிறகு தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் சமந்தா தனது முன்னாள் காதலன் குறித்து ஒரு திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

அதில் அவர், நடிகையர் திலகம் படத்தில் நடிக்கும்போது நான் என் சொந்த வாழ்க்கை கதையில் நடிப்பதை போன்று உணர்ந்தேன். நான் ஒரு நடிகரை கண்மூடித்தனமாக காதலித்தேன், ஆனால் நல்ல நேரம் எனக்கு அந்த நபரிடம் இருந்து தப்பித்துவிட்டேன்.

இல்லையென்றால் என்னுடைய வாழ்க்கையும் சாவித்திரி வாழ்க்கை மாதிரியே ஆகியிருக்கும். நான் செய்த புண்ணியம் தான் நான் நாக சைத்தன்யாவை சந்தித்தது என்று கூறியுள்ளார்.

Comments