இழப்பீடுகளை துரிதமாக்க அமைச்சரவைப் பத்திரம் | தினகரன் வாரமஞ்சரி

இழப்பீடுகளை துரிதமாக்க அமைச்சரவைப் பத்திரம்

விசாரணையையும்

இழப்பீட்டையும் சமகாலத்தில் முன்னெடுக்க யோசனை

தாமதித்தால் நல்லிணக்கத்துக்கு பெரும் பாதிப்பு

விசு கருணாநிதி

காணாமற்போனோரின் உறவினர்களின் குடும்பங்களுக்குத் துரிதமாக இழப்பீடு வழங்க நடவடிக்ைக எடுக்குமாறு வலியுறுத்தி அமைச்சரவைப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்யப்போவதாக தேசிய சகவாழ்வு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இழப்பீட்டை வழங்குவதற்குச் சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் தயாராக இருப்பதால், அதற்கான வழியைத் திறந்துவிடுவதற்கு ஏதுவாகத் துரித நடவடிக்ைகயை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அமைச்சர் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

இழப்பீட்டைக் கோருவதாலோ அல்லது அதனைப் பெற்றுக்ெகாள்வதாலோ, தற்போது முன்னெடுக்கப்படும் காணாமற் போனோர் தொடர்பான அலுவலத்தின் பணிகள் பாதிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் சொன்னார்.

விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, சமகாலத்தில் அந்த மக்களுக்குரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், இழப்பீடு வழங்கும் பணி தாமதிப்பதால், நல்லிணக்கச் செயற்பாடுகளுக்குத் தடங்கலாக உள்ளதென்று குறிப்பிட்டார்.

காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது, எந்த வகையிலும் காணாமற்போனவரின் உயிருக்கு இணையாகமாட்டாது என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் மனோ கணேசன், அந்த உறவுகளின் வாழ்வாதாரத்தைக் கருத்திற்கொண்டு தாம் இதற்கான நடவடிக்ைகயை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், இழப்பீட்டைப் பெற்றுக் ெகாள்ள விருப்பம் இல்லாது

எவராவது இருப்பின், அஃது அவரவரின் தனிப்பட்ட முடிவாகும் என்றும் வழங்கப்படும் இழப்பீட்டைப் பெற்றுக்ெகாள்வதால், காணாமற்போனவரைக் கண்டுபிடிக்கும் முயற்சிக்குப் பாதிப்பு ஏற்படாது என்றும் தெளிவுபடுத்தினார்.

காணாமற்போனோரின் குடும்பங்களை மேலும் அலைக்கழிக்க வேண்டாம் என்றும் அவர்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்ெகாடுக்க நடவடிக்ைக எடுக்குமாறும் நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் கோரிக்ைக விடுத்துள்ள அமைச்சர் மனோ கணேசன், விரைவில் அமைச்சரவைப் பத்திரத்தைத் தாக்கல் செய்து அந்தப் பணியைத் தாமே ஆரம்பித்து வைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Comments