இணையத்தளம் ஊடாக பரிசோதனை முடிவுகள்; ஹேமாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது | தினகரன் வாரமஞ்சரி

இணையத்தளம் ஊடாக பரிசோதனை முடிவுகள்; ஹேமாஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

இலங்கையில் முதல் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் இணைந்த புதிய பல சேவைகளை தமது வாடிக்கையாளர்களுக்கு ஹேமாஸ் வைத்தியசாலை குழுமத்தின் இராசாயன ஆய்வுகூட சேவை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

வைத்தியத்துறையில் ஹேமாஸ் இராசாயன ஆய்வுகூட சேவையின் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தலவத்துகொட, வத்தளை காலி ஹேமாஸ் வைத்தியசாலைகளில் அமைந்துள்ள இரசாயன ஆய்வுகூடங்களினாலும், நாடளாவிய ரீதியில் இயங்குகின்ற ஹேமாஸ் ஆய்வுகூடங்கள் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படுகின்றன. இந்த டிஜிட்டல் சேவைகளில் விசேட இணையத்தளம் ஊடான நுழைவும் (Laboratory Portal), ஹேமாஸ் இரசாயன ஆய்வுகூட சேவைக்காகவே தனியான (www.labs.hemashospitals.com) இணையத்தளம் மற்றும் வாடிக்கையாளர்களின் இரசாயன ஆய்வுகளின் பெறுபேறுகள் தயாரானதும் அதுகுறித்து அறிவிக்கும் குறுந்தகவல் சேவையும் இந்த டிஜிட்டல் சேவைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஹேமாஸ் வைத்தியசாலைகள் குழுமத்தின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தூரநோக்குடைய தீர்மானத்தின் பிரகாரம் ஹேமாஸ் வைத்தியசாலை இரசாயன ஆய்வுகூட சேவைகள் மீதும் பாரிய முதலீடுகள் செய்யப்பட்டு, அவற்றில் முன்னெடுக்கப்படும் பரிசோதனைகளை மேம்படுத்தல், அதிகூடிய தரப்படுத்தல் முறை மற்றும் சர்வதேச தரப்படுத்தல் முறைமையை அறிமுகப்படுத்தல், அனைத்து ஹேமாஸ் வைத்தியசாலைகளினதும் இரசாயன ஆய்வுகூடங்களை இணைக்கக்கூடிய தகவல் கட்டமைப்பு மற்றும் உள்ளக ரீதியாக மேம்படுத்தப்பட்ட இணையத்தள நுழைவு வசதி (Laboratory Portal) உள்ளடங்கலாக நாட்டில் முதன் முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகின் பல்வேறு ஆரோக்கிய சேவைகளையும் ஹேமாஸ் குழுமம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையத்தளம் ஊடாக இரசாயன பரிசோதனை முடிவுகளை நோயாளர் பெற்றுக்கொள்ளும் வகையில் வசதிகள் எற்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் இரசாயன பரிசோதனை அறிக்கைகளை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலையை நாட வேண்டிய அவசியமில்லை. வேலைப் பளுவுடன் இருப்போர் இத்தகைய சேவைகள் மூலம் நேரத்தையும், பணத்தையும் சேமிக்கக்கூடியதாக இருக்கும்.

Comments