இலங்கையர் அதிகம் விரும்பும் வர்த்தக நாமமாக | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையர் அதிகம் விரும்பும் வர்த்தக நாமமாக

இலங்கையில் 60 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் மலிபன் பிஸ்கட் மெனுபக்ஷரிஸ், இலங்கையர்களின் மனங்கவர்ந்த நாமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. LMD இன் வருடாந்த வர்த்தக நாம விருதுகள் 2018இன் தரப்படுத்தலை மேலும் உறுதி செய்யும் வகையில் பிரான்ட் ஃபினான்ஸ் லங்காவினால் நாட்டில் காணப்படும் மிகவும் மனம் விரும்பிய 125 வர்த்தக நாமங்களில் ஒன்றாக மீண்டும் மலிபனை மூன்றாவது தடவையாக தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பிரான்ட் ஃபினான்ஸ் மூலமாக சகல துறைகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த 3500 க்கும் அதிகமான வர்த்தக நாமங்கள் தரப்படுத்தப்படுகின்றன. பெறுபேறுகள் திரட்டப்பட்டு, த பேங்கர் போன்ற பங்காளர்களுடன் கைகோர்த்து ஊடகங்களில் வெளியிடப்படுவதுடன், இதனுௗடாக வர்த்தக நாமங்களை பெறுமதி வாய்ந்த வர்த்தக சொத்துக்களாக விழிப்புணர்வை மேம்படுத்துவது, அவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியது மற்றும் நிர்வகிக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவம் போன்றன உணர்த்தப்படுகின்றன.

இலங்கையில் காணப்படும் பிரான்ட் ஃபினான்ஸ் லங்கா அலுவலகத்தினால் LMD சார்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுடன், நாட்டில் காணப்படும் அதிகளவு நேசிக்கப்படும் நுகர்வோர் வர்த்தக நாமத்துக்கான தரப்படுத்தல் முன்னெடுக்கப்படுகின்றது.

ஒப்பற்ற தரம் மற்றும் சுவை ஆகியவற்றை எப்போதும் வழங்குவது எனும் எமது ஸ்தாபகர்களின் உறுதி மொழியை நாம் நிறைவேற்றுகிறோம் - முகாமைத்துவ பணிப்பாளர் குமுதிகா பெர்னான்டோ.

இந்த கெளரவிப்பு தொடர்பில் மலிபன் பிஸ்கட்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் குமுதிகா பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “எமது ஸ்தாபகர் ஏ.ஜி.ஹின்னிஅப்புஹாமி அவர்களால் கொட்டாஞ்சேனையில் நிறுவப்பட்ட வெதுப்பகத்தில் எமது எமது தரமான தயாரிப்புகளின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தன.

பல ஆண்டுகளாக தொடர்ந்திருந்த எமது ஆய்வு மற்றும் அபிவிருத்தி அணியின் அர்ப்பணிப்புடன், எம்மால் தொடர்ச்சியாக புத்தாக்கமான மற்றும் புரட்சிகரமான தயாரிப்புகளை எமது பரந்தளவு வாடிக்கையாளர்களின் சுவை நரம்புகளுக்கு விருந்தளிக்கக்கூடிய வகையில் அமைந்திருந்தன.

இலங்கையில் காணப்படும் ஏனைய பிஸ்கட் வர்த்தக நாமங்களை விட உயர்ந்த நிலையில் மலிபன் வர்த்தக நாமத்தை தரமுயர்த்தியுள்ளதனூடாக, எமது நுகர்வோர் எமது ஸ்தாபகரின் ஒப்பற்ற தரம் மற்றும் சுவையை வழங்குவது எனும் கொள்கையுடன் நாம் தற்போதும் திகழ்வதை உறுதி செய்துள்ளனர். இதை எமது தற்போதைய தலைவர் ரத்னபால சமரவீர முன்னெடுத்து வருகிறார்” என்றார்.

Comments