கொழும்பில் மாபெரும் BIG BAD WOLF SALE புத்தக விற்பனை | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பில் மாபெரும் BIG BAD WOLF SALE புத்தக விற்பனை

  •    24 மணி நேர புத்தக விற்பனை. 
  •   ஜுன் 28 முதல் ஜுலை 8 வரை 
  • 1.5 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் 60%- - 80% வரையான விலைத் தள்ளுபடிகளுடன் 

உலகில் இடம்பெறும் மிகப்பாரிய புத்தக விற்பனை நிகழ்வான Big Bad Wolf ம் ஜுன் 28 ஆம் திகதி முதல் ஜுலை 8 ஆம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (SLECC) பொதுமக்களுக்காக திறக்கப்படவுள்ளது.

இவ்விற்பனை நிகழ்வின் மூலமாக புத்தகப் பிரியர்கள் 255 மணி நேரம் இடைவிடாத புத்தக கொள்வனவு அனுபவத்தைப் பெற்றுக்கொள்ளவுள்ளதுடன், நிகழ்வு இடம்பெறும் 11 தினங்களும் 24 மணி நேர விற்பனை இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அறிவிக்கும் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பு பார்க் ஸ்ரீட் மியூஸில் நடைபெற்றது. Big Bad Wolf Books இன் ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான அன்ட்ரூ யாப், Big Bad Wolf Books பங்காளரான தீபக் மாதவன், ProRead Lanka (Pvt) Ltd இன் பணிப்பாளரான நிஷான் வாசலதந்திரி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் இலங்கை கல்வியமைச்சு இந்நிகழ்விற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. உத்தியோகபூர்வ வங்கிச்சேவை பங்காளரான இலங்கை வங்கி, உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் சேவை பங்காளரான மொபிடெல் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் ஆகியன இந்நிகழ்வின் பங்காளர்களாகச் செயற்படுகின்றன. Upay கொடுப்பனவு சேவையும் இதற்கு வலுவூட்ட முன்வந்துள்ளது.

இந்நிகழ்வு பொதுமக்களுக்காக திறந்து விடப்படுவதற்கு முன்பதாக ஜுன் 27 அன்று மு.ப 10.00 மணி முதல் பி.ப 11.00 மணி வரை இடம்பெறவுள்ள விசேட முன்னோட்ட நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தெரிவு செய்யப்பட்ட விருந்தினர்கள் பெற்றுக்கொள்ளவுள்ளனர். Big Bad Wolf முகநூல் பக்கத்தில் இடம்பெறும் போட்டி மற்றும் அதன் ஊடக பங்காளர்களின் மூலமாக முன்னோட்டத்திற்கான சிறப்பு அழைப்பிதழ்களை விருந்தினர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

Comments