17 வயதில் இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை | தினகரன் வாரமஞ்சரி

17 வயதில் இரட்டை சதம் அடித்து நியூசிலாந்து வீராங்கனை சாதனை

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து வீராங்கனை இரட்டை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்

அயர்லாந்து - நியூசிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் டப்ளினில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

தொடக்க வீராங்கனையாக களம் இறங்கிய அமெலியா கெர் அதிரடியாக விளையாடி ஒட்டங்கள் குவித்தார். அவர் 145 பந்தில் 31 பவுண்டரி, 2 சிக்சருடன் 232 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தார்.

இவரது இரட்டை சதத்தால் நியூசிலாந்து 440 ஓட்டங்கள் குவித்தது. மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் 2-வது இரட்டை சதம் இதுவாகும். மேலும், 17 வயது 243 ஒட்டங்களில் இந்த இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் இளம் வயதிலேயே இரட்டை சதம் அடித்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் கெர் 19 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 174 ஓட்டங்கள் மட்டுமே அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் அவுஸ்திரேலிய வீராங்கனை கிளார்க் 229 ஓட்டங்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

Comments