செலான் வங்கி முதலாம் காலாண்டில் 21% வளர்ச்சி | தினகரன் வாரமஞ்சரி

செலான் வங்கி முதலாம் காலாண்டில் 21% வளர்ச்சி

பொருத்தமான சந்தை நிலவரங்கள் குறைவாகவே காணப்பட்ட சூழ்நிலையிலும் செலான் வங்கியானது முதலாம் காலாண்டில் வரிக்குப் பின்னரான இலாபமாக ரூபா 1,053 மில்லியனை பெற்றுக் கொண்டதன் மூலம் 2018 ஆம் ஆண்டை உறுதிமிக்க விதத்தில் ஆரம்பித்திருக்கின்றது.

வங்கியின் தேறிய வட்டி எல்லைகள் (NIMs) குறுகலடைந்ததன் விளைவாக பருமனளவில் ஏற்பட்ட சிறப்பான வளர்ச்சியினால், வங்கியின் தேறிய வட்டி வருமானம் 17.21% இனால் அதிகரித்தது.

கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியில் ரூபா 868 மில்லியனாக பதிவு செய்யப்பட்ட வங்கியின் தேறிய கட்டண மற்றும் தரகு வருமானத்துடன் ஒப்பிடுகையில் 2018 இன் முதலாம் காலாண்டில் ரூபா 995 மில்லியனாக 14.61% இனால் அதிகரித்திருக்கின்றது. பல்வேறுபட்ட வாடிக்கையாளர் மற்றும் சந்தைப் பிரிவுகளில் கட்டணத்தை பெற்றுத் தரும் வணிகத்தை தம்வசப்படுத்துவற்கான முன்முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்தவகையில், அட்டையுடன் (Card) தொடர்புபட்ட வருமானம், வணிக நிதியுடன் தொடர்புடைய கட்டண வருமானம் மற்றும் பிணையங்கள் மற்றும் பணவனுப்பல்களில் இருந்தான கட்டணங்கள் போன்றவற்றில் இவ்வாறான முன்முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 

Comments