புதிய கூட்டு நடவடிக்கையில் McPeak Lanka | தினகரன் வாரமஞ்சரி

புதிய கூட்டு நடவடிக்கையில் McPeak Lanka

McOcean Property Developers (Pvt) Ltd மற்றும் சிங்கப்பூரின் Peak Engineering & Consultancy (Pte) Ltd ஆகியவற்றிற்கிடையிலான கூட்டு வியாபார முயற்சியாக, உள்நாட்டுச் சந்தையில் ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகள் முகாமைத்துவத் தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனமான McPeak Lanka (Private) Limited இனை ஆரம்பித்துள்ளன.

நாட்டிலுள்ள விசாலமான அரச மற்றும் தனியார் துறை ஸ்தாபனங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகள் முகாமைத்துவத் தீர்வுகளை வழங்குவதற்கு McPeak Lanka எண்ணியுள்ளது. தமது ஸ்தாபனங்களில் உயர்தர சேவை ஆற்றல்களை மேம்படுத்தி, நிலைபெறச் செய்வதை நாடுவோருக்கு முழுமையான வகைப்பட்ட அதிநவீன தீர்வுகளை நிறுவனம் வழங்கவுள்ளது. வர்த்தக, கைத்தொழில், சில்லறை வர்த்தக அல்லது கலப்பு அபிவிருத்தி ஏற்பாடுகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் தேவைகளை பிரத்தியேகமாக ஈடுசெய்யும் வகையில் பணியாளர்கள், நடைமுறைகள் மற்றும் தொகுதிகளை இடையறாது ஒருங்கிணைப்பதனூடாக ஒரு உண்மையான ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் கட்டமைப்பினை McPeak Lanka வழங்கவுள்ளது. பாரிய அளவிலான கட்டடங்களின் தொழிற்பாடு மற்றும் பேணற்சேவை, பிரத்தியேகமான எந்திரவியல் மற்றும் மின்னியல் பொறியியல் நிபுணத்துவம், முழுமையான உள்ளக பேணற்சேவை மற்றும் துப்புரவு சேவைகள், பொது வசதிகளின் பேணற்சேவை, அதிநவீன பாதுகாப்பு சேவைகள் மற்றும் தொகுதிகள், பதில் மருத்துவ மற்றும் வரவேற்பு ஆதரவு சேவை மற்றும் ஏனைய பல்வேறுபட்ட பிரத்தியேக சேவைகள் போன்றவை நிறுவனத்தின் சேவைகளில் உள்ளடங்கியுள்ளதுடன், பாவனையாளருக்கு ஒருங்கிணைந்த ஆதன முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம் சார்ந்த முழுமையான தீர்வுகளை வழங்குகின்றது. ஆதனம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவத் துறையில் இரு தசாப்தங்களுக்கும் மேற்பட்ட உள்நாட்டு அனுபவத்தைக் கொண்டுள்ள McLarens Group இன் அனுகூலத்தைப் பயன்படுத்தவுள்ள McPeak Lanka குடியிருப்பு, வர்த்தக, சில்லறை வர்த்தக மற்றும் கைத்தொழில் ஆதனங்களை திறம்பட நிர்வகிப்பதில் சிங்கப்பூரின் Peak Engineering and Consultancy கொண்டுள்ள புத்தாக்கம், தொழில்சார் சிறப்பு மற்றும் மேன்மையான சேவை ஆகியவற்றை ஒன்றிணைக்கவுள்ளது.

Comments