“லக்ஸ்பிறே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள்” | தினகரன் வாரமஞ்சரி

“லக்ஸ்பிறே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள்”

50 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் இல்லத்தரசிகளின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமான லக்ஸ்பிறே முன்னெடுத்திருந்த ஊக்குவிப்புத்திட்டமான “லக்ஸ்பிரே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள்” ஊடாக 30 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு தங்க நெக்லஸ்களை பரிசாக வழங்கியிருந்தது. இந்த பரிசுகளை கையளிக்கும் நிகழ்வு வெலிசறை லங்கா மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தில் அண்மையில் இடம்பெற்றது. இந்த ஊக்குவிப்புத்திட்டத்தில் முதற்கட்டமாக பங்கேற்றிருந்த ஒரு தொகுதியினராக இந்த 30 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் அமைந்திருந்ததுடன், இந்த நிகழ்வில், லங்கா மில்க் ஃபுட்ஸ் நிர்வாகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் “லக்ஸ்பிரே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள்” திட்டத்தை லக்ஸ்பிரே அறிமுகம் செய்திருந்தது. உண்மையான வாடிக்கையாளர்களை கெளரவிக்கும் நோக்குடன் இந்தத்திட்டம் அமைந்திருந்தது. அத்துடன், அவர்களுடன் பேணும் உறவை மேலும் கட்டியெழுப்பும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த திட்டம் மூன்று கட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், 22 கெரட் தங்க நெக்லஸ்களை சுமார் 100 பங்குபற்றுநர்களுக்கு வழங்க லங்கா மில்க் ஃபுட்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த ஊக்குவிப்புத்திட்டத்தில் பங்கேற்பதற்கு, நுகர்வோர்கள் இந்த வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும். இரண்டு 400 கிராம் லக்ஸ்பிறே பால் மா பைக்கற்கள் அல்லது ஒரு 1கிலோகிாரம் பால்மா பைக்கற்றில் காணப்படும் உற்பத்தி திகதி கொண்ட பகுதியை வெட்டி, அதில் உங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு, லக்ஸ்பிரே இல்லத்தரசிகளுக்கு தங்கப் பரிசுகள், லங்கா மில்க் ஃபுட்ஸ், வெலிசற, ராகம எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Comments